1. Home
  2. Cinema News

Vijay TVK: ப்ளைட் ஏறி மட்டும் போக தெரியுது.. மேடை நாடகம் போடும் விஜய்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு?

Vijay TVK: ப்ளைட் ஏறி மட்டும் போக தெரியுது.. மேடை நாடகம் போடும் விஜய்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு?

Vijay TVK: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் விஜய். அவரது நடிப்பில் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸாக வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே லீடு ரோலில் நடித்திருக்கிறார். இவருடன் மமிதா பைஜூ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் பிரகாஷ்ராஜ், பாபிதியோல் என படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். பொலிட்டிக்கல் பின்னணியில் இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் ஜனநாயகன். அதனால் இந்தப் படத்தில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார்.

அரசியல் வசனங்கள் சூடுபிடிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் வசனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் விஜய்க்கு கடைசி படம். அதன் பிறகு முழு நேர அரசியல் வேலைகளை பார்க்க இருக்கிறார். சமீபத்தில்தான் மதுரையில் பெரிய அளவில் மாநாட்டை கூட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதற்கு முன் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி வெற்றிகண்டார்.

இதில் அனைவருடைய பார்வையும் விஜயின் பெற்றோர்கள் மீதுதான் இருந்தன. ஆரம்பத்தில் விஜய்க்கும் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்தனர். முதல் மா நாட்டில்தான் இருவரும் கட்டிபிடித்து கொண்டனர். மதுரை மா நாட்டில் அவர்களை மேடையில் அமர வைத்து அழகு பார்த்தது மட்டுமில்லாமல் இருவரின் கன்னங்களையும் கொஞ்சி விஜய் முத்தமிட்டார்.

இது நடந்த சில தினங்களில்தான் விஜயின் பெற்றோர் புது வீடு கிரகபிரவேசம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அதில் விஜய் கலந்து கொள்ளவில்லை. அதற்கு மாறாக அவர்களின் உறவினர்கள் அனைவரும் அந்த கிரகபிரவேசத்தில் கலந்து கொண்டனர். ஆனால் விஜய் மற்றும் அவரது மனைவி பேரக்குழந்தைகள் என யாருமே கலந்து கொள்ளவில்லை. இது பெரும் சர்ச்சையாக இப்போது பேசப்பட்டு வருகிறது.

Vijay TVK: ப்ளைட் ஏறி மட்டும் போக தெரியுது.. மேடை நாடகம் போடும் விஜய்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு?
House warming

அதுவும் விஜய் இப்போது அரசியலில் இரு பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருப்பதால் இந்த செய்தியை கையில் எடுத்து விஜயை சாடி வருகின்றனர். கீர்த்தி , திரிஷா வீடு கிரகபிரவேசம் என்றால் இந்நேரம் முதல் ஆளாக சென்றிருப்பார். தன் பெற்றோர் புது வீடு கிரகப்பிரவேசத்திற்கு வராதவர் மேடையில் மட்டும் ஏன் நாடகம் போடுகிறார்? கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி பிளைட் ஏறி கோவா வரை சென்றார். ஆனால் உள்ளூருக்கு மட்டும் அவரால் வர முடியவில்லையா? என்றெல்லாம் கடுமையாக சாடி வருகின்றனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.