
Cinema News
Vijay TVK: செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி! போட்டாரே ஒரு போடு.. புதுசா சொன்ன விஜய்
Vijay TVK:
திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த மாவட்டங்களில் இருக்கும் ஒவ்வொரு ஊராக சென்று மக்களை சந்தித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறார். ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் விஜயின் பேச்சு மற்ற அரசியல் தலைவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக அவரை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நடிகருக்காக கூடிய கூட்டம் என்றாலும் ஒரு தேர் வருவதை போல் விஜயின் வாகனம் மெதுவாக ஊர்ந்து வர அவர் வண்டியை சூழ்ந்து கொண்டு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இன்றும் நாமக்கல்லில் எக்கச்சக்கமான கூட்டம். அதில் விஜய் பேசிய சில விஷயங்கள் இதோ:
எது நடைமுறைக்கு சாத்தியமோ எது உண்மையோ அதைத்தான் சொல்லுவோம். அதைத்தான் செய்வோம். திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகள் மாதிரி எப்போதும் போல கொடுக்கமாட்டோம். புதுசா சொல்லுங்க.. புதுசா சொல்லுங்கனா என்னத்த சொல்றது? எனக்கு புரியலயே..செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும். அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும்.
வீட்டிற்குள்ளயே விமானம் ஓட்டப்படும் . இந்த மாதிரி அடிச்சு விடுவோமா? நம்ம முதலமைச்சர் அடிச்சு விடுவாரே.. அந்த மாதிரி அடிச்சு விடுவோமா? என்ன இவரு எங்க போனாலும் கேள்வியா கேட்குறாரு?னு சொன்னாங்க. அதற்கான விளக்கத்தை ரெண்டு இடத்துல சொன்னோம். கல்வி, ரேஷன், மருத்துவம் , குடிநீர், அடிப்படை சாலை வசதி, மின்சாரம், போக்குவரத்து , பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என இந்த அடிப்படை விஷயங்களில் எந்த சமரசமும் இல்லாமல் கரெக்டா செய்யப்படும் என சொன்னோம்.
இதைத்தான் எல்லாரும் சொன்னாங்க. அதைத்தான் இவரும் சொல்றாரு. இவரு ஒன்னும் புதுசா எதுவுமே சொல்லலையே..ஐயா அரசியல் மேதைகளே.. ஒரு மனுஷனுக்கு சாப்பிடுவதற்கு நல்ல சோறு, படிப்பதற்கு நல்ல கல்வி, குடிப்பதற்கு நல்ல குடிநீர், அவனை நல்லா பார்த்துக் கொள்வதற்கு நல்ல வசதி, தங்கு தடையின்றி போய்வர நல்ல போக்குவரத்து, , அதற்கான சாலைவசதி, பாதுகாப்பான ஒரு வாழ்க்கை. இதுதான் மனுஷனுக்கு அடிப்படை தேவை?
இன்றைக்கும் இதுதான் நம்முடைய தேவை. மேலும் இந்த பாசிச பாஜகவுடன் நாங்க எப்போதும் ஒத்துப்போக மாட்டோம். திமுக அரசு மாதிரி அன்டர் கிரவுண்ட் டீலிங்கும் எங்களுக்கு தெரியாது. பாஜகவுடன் மறைமுகமான உறவுக்காரர்களாக திமுக மாதிரி இருக்க மாட்டோம். மூச்சுக்கு முந்நூறு தடவை அம்மா அம்மானு சொல்லிக்கிட்டு ஜெயலலிதா மேடம் சொன்ன அந்த விஷயங்களை எல்லாம் மொத்தமா மறந்துட்டு பாஜவுடன் பொருந்தாக் கூட்டணியா இருக்காங்களே? அவங்களை மாதிரியும் நாம இருக்கமாட்டோம்.
இந்த பாஜக அரசு தமிழ் நாட்டுக்கு என்ன செய்துவிட்டார்கள்? நீட் – ஐ ஒழித்துவிட்டார்களா? கல்விக்கு தேவையான அந்த நிதியை முழுசா கொடுத்துட்டாங்களா? இல்ல தமிழ் நாட்டுக்கு தேவையான எல்லாவற்றையும் சரியா செய்துட்டாங்களா? அப்போ எதற்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணினு நான் கேட்கல..புரட்சித்தலைவரோட உண்மையான தொண்டர்கள்தான் கேட்கிறார்கள்.
அதனால் வரும் 2026 தேர்தலில் ரெண்டே கட்சிகளுக்குத்தான் போட்டி. ஒன்னு திமுக. இன்னொன்று தவெக. இல்ல தெரியாம தான் கேட்குறேன். என் மேல இவ்வளவு நம்பிக்கையா? என்னை இந்தளவு நம்புறீங்ளா? அப்போ பார்த்துடலாம். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வரை ஒரு மாதிரியாத்தான் இருந்தேன். ஆனால் இனிமேல் பார்த்துவிடலாம் என இன்று நாமக்கலில் விஜயின் பேச்சு அனல்பறக்க இருந்தது.