தளபதி 69-ல் ஆர்வம் காட்டாத விஜய் ரசிகர்கள்!.. அட இதுதான் காரணமா?!...

by Murugan |
thalapathy69
X

Thalapathy 69: ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருந்தாலும் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு போகிறேன் என சொல்லிவிட்டார். வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படம் ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

பகவந்த் கேசரி:இது தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தில் அசல் ரீமேக் ஆகும். ஆனால், இது அந்த படத்தின் ரீமேக்தான் என அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் சொல்லவில்லை. இந்த படத்தை 5 முறை பார்த்த விஜய் அதை தெலுங்கில் இயக்கிய அனில் ரவிப்புடியையே தமிழிலும் இயக்க சொன்னார்.

ஆனால், நான் ரீமேக் படங்களை இயக்க மாட்டேன் என அவர் சொல்லிவிட்டதால் ஹெச்.வினோத்தை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். தெலுங்கில் ஸ்ரீலீலா செய்த வேடத்தில் தமிழில் மமிதா பைஜூவும், காஜல் அகர்வால் செய்த வேடத்தில் தமிழில் பூஜா ஹெக்டேவும் நடித்து வருகிறார்கள்.


தளபதி 69 நடிகர்கள்: தெலுங்கில் வில்லனாக அர்ஜூன் ராம்பல் நடித்த நிலையில் தமிழில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. பொதுவாக விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கினால் அந்த படம் தொடர்பான அப்டேட்டுகளை அவரின் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் என எல்லாம் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால், இந்த படத்திற்கு எதையும் எதிர்பார்க்கவில்லை. படத்தின் அறிவிப்பு வெளியானபோது ஒர் போஸ்டர் வெளியானதோடு சரி. அதன்பின் பூஜை நடந்தபோது அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மட்டும் வெளியானது.


தளபதி 69 அப்டேட்: அதன்பின் இந்த படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. விஜய் ரசிகர்கள் அதை எதிர்பார்ப்பது போலவும் தெரியவில்லை. அதற்கு காரணம் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லிவிட்டதால் அரசியல்ரீதியாக அவர் என்ன செய்கிறார்? யாரை சந்திக்கிறார்? என்ன பேசுகிறார்? என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம்தான் விஜய் ரசிகர்களிடம் இப்போது இருக்கிறது.

அதேநேரம், இனிமேல் அரசியல்தான் என விஜய் சொல்லிவிட்டாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை வைத்தே அவர் சினிமாவில் நடிப்பாரா இல்லையா என்பது தெரியவரும்.

Next Story