அடுத்த ஐஞ்சு நாளுக்கும் ட்ரீட் கியாரண்டி… தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!..
Vijay: விஜய் ரசிகர்களுக்கு இன்றிலிருந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக தான் அமைய இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். அப்பா ஏற்படுத்திக் கொடுத்த மேடை என்றாலும் அதை தன் வசமாக அவர் பாடுபட்டது மிகப்பெரிய விஷயம்தான். ஒவ்வொரு அடியையும் பெரிய போராட்டத்துடன் எடுத்து வைத்து இன்று தமிழ் சினிமாவின் உச்சமாக மாறியிருக்கிறார்.
கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சினிமாவை உதறிவிட்டு மக்கள் பணியில் இறங்க இருக்கிறார். இதனால் அவரின் கடைசி படமாக தளபதி 69 அமைய இருக்கிறது. இதனால் இனி படத்தின் ரிலீஸ் வரை இதுதான் கடைசி என ரசிகர்கள் கவலையுடன் தான் இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துள்ளது.
ஆனால் இந்த கவலையிலும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான வாரமாக மாறி இருக்கிறது. தளபதி 69 படத்தின் படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கேபிஎன் நிறுவனத்தால் இன்று வெளியிடப்பட இருக்கிறது.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இந்த அறிவிப்பு நடக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அக்டோபர் மூன்றாம் தேதி கோட் படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட இருக்கிறது. அக்டோபர் நான்காம் தேதி தளபதி 69 படத்தின் பூஜை நடைபெற இருக்கிறது.
அக்டோபர் ஐந்தாம் தேதி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். முதல் சிங்கிளின் படப்பிடிப்பு தான் இந்த மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த வாரத்தை கொண்டாடி தீர்க்க முடிவு எடுத்திருப்பதாகவும் இணையத்தில் பதிவுகள் குவிய தொடங்கி தொடங்கி இருக்கிறது.