அடம் பிடிக்கும் விஜய் ரசிகர்கள்… கம்முனு இருக்கும் தளபதி.. நியாயமா இதெல்லாம்?

by Akhilan |
அடம் பிடிக்கும் விஜய் ரசிகர்கள்… கம்முனு இருக்கும் தளபதி.. நியாயமா இதெல்லாம்?
X

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய தளபதி 69 திரைப்படத்துடன் அரசியலில் நுழைய இருக்கும் நிலையில் அவருடைய ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல் தற்போது எக்ஸ் வலைதளத்தில் செய்து கொண்டிருக்கும் ஒரு டிரெண்ட் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவரின் மகனாக சினிமாவிற்குள் வந்தவர் நடிகர் விஜய். முதல் சில திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் விமர்சன ரீதியாக தோல்வி படங்களாக தான் அமைந்தது. இருந்தும் தொடர்ச்சியாக அவருடைய தந்தை விஜயை வைத்து படங்களை இயக்கி வந்தார்.

அதைத் தொடர்ந்து விஜயை வைத்து முன்னணி இயக்குனர்கள் திரைப்படத்தை இயக்கினர். அப்படங்கள் நல்ல வரவேற்பு பெற தொடர்ச்சியாக முயன்று தற்போது கோலிவுட்டில் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார் விஜய். இளையதளபதியாக இருந்த விஜய் மெர்சல் திரைப்படத்தின் மூலம் தளபதியாக இருந்தார்.

அதுவும் விஜயின் கடைசி படங்களான லியோ மற்றும் கோட் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிலும் லியோ படத்தில் விஜயின் மாஸ் காட்சிகள் இன்னமும் சூப்பர்ஹிட்டாக இருக்கிறது. இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் முடிவடைந்து இருக்கிறது.

தொடர்ந்து செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் இதை கொண்டாடும் விதமாக லியோ திரைப்படத்திற்கு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஒரு பக்கம் வைரல் ஆகி வருகிறது. ஆனால் விஜய் ரசிகர்கள் தற்போது லியோ2 என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

லோகேஷின் எல்சியூவிற்குள் வந்த லியோ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. இதனால் இரண்டாம் பாகம் வெளியானால் அது கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பைத் தரும் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் தன்னுடைய தளபதி 69 திரைப்படத்துடன் சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். மொத்தமாக அரசியலுக்குள் செல்ல இருக்கும் தளபதி கோலிவுட் பக்கம் தலைகாட்டுவது அரிதுதான் என்பது தெரிந்தும் ரசிகர்கள் இப்படி பேசி வருவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story