ஒரு வாரம் ரொம்ப அதிகம்!.. வேட்டையன் படத்தோட ரிசல்ட்டை இப்படியா வெளிப்படையா சொல்வார் ரஜினிகாந்த்?..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியான நிலையில் இதுவரை மூன்று மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூபில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சோசியல் மீடியாவில் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் டிரைலரை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் அதிக அளவில் கிண்டல் செய்து வருகின்றனர்.
சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே தேதியில் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டி வேண்டாம் என நினைத்து சூர்யா நவம்பர் 14-ஆம் தேதி தனது கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன் காரணமாக சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து ரஜினிகாந்தையும் அவர் நடித்துள்ள வேட்டையன் படத்தையும் ட்ரோல் செய்து வருகின்றனர். வேட்டையன் படத்தின் டிரைலர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் லைகாவுக்கு அடுத்த நஷ்டம் ரெடி என்றும் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேட்டையின் படத்துக்கு எதிரான நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் பேசும் மாஸ் வசனமான ஒரு வாரம் எதற்கு மூன்று நாட்களில் டிபார்ட்மென்ட் க்கு நல்ல பெயர் வாங்கித் தருகிறேன் என்கிற வசனத்தை மாற்றி வேட்டையின் திரைப்படம் ஒரு வாரம் எல்லாம் ஓடாது, இன்னும் மூன்று நாட்களில் முடிந்து விடும் என சூப்பர் ஸ்டாரே படத்தின் ரிசல்ட்டை சொல்லிவிட்டார் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கூலி படமும் திட்டமிட்டபடி சீக்கிரம் வெளியாகாது என்றும் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்றும் கூறுகின்றனர்.