Vijay: யாருடா கோழை? வசனம் பேசி தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட விஜய்
Vijay:
தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன. அதுவும் தவெக கட்சி மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சி ஆரம்பித்து இரண்டு வருடத்தில் இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு விஜய் தள்ளப்படுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
விஜயின் கனவு:
வரும் 2026 சட்டமன்ற தேர்தலை தைரியமாக எதிர்கொண்டு கண்டிப்பாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவோம் என விஜய் உட்பட அவருடைய கட்சி தொண்டர்களும் பெரும் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமாகுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. கரூரில் நடத்திய தேர்தல் பரப்புரையில் கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சம்பவம் நடந்த அன்று இரவே தகவல் அறிந்தும் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல் அவசர அவசரமாக விமானம் ஏறி சென்னைக்கு புறப்பட்டார். விமான நிலையத்தில் அவரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்களும் இது பற்றி கேள்வி கேட்க அதற்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
இவர நம்பி இறங்கணுமா?
இதுவே பெரும் பேசு பொருளாக மாறியது. இருந்தாலும் அதையும் மீறி அங்கு இருந்திருந்தால் அல்லது நேரடியாக போய் மக்களை சந்தித்திருந்தால் இன்னும் பெரும் விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால்தான் விஜய் அங்கு இருந்து சென்றிருக்கிறார். ஆனால் இதை மற்ற கட்சியினர் தனக்கு சாதகமாக்கி விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இப்படி பாதியிலேயே மக்களை விட்டுட்டு போனவரை நம்பியா இந்த நாட்டை கொடுக்க முடியும்? பயந்து போய் ஓடிவிட்டார், ஒளிந்து கொண்டார் என்றெல்லாம் பேசினார்கள். இந்த நிலையில் விஜய் அவருடைய படத்தில் வீர வசனம் ஒன்றை நடிகர் பசுபதிக்கு எதிராக பேசியிருப்பார். அதை இப்போது நெட்டிசன்கள் பகிர்ந்து இந்த வீரவசனம் எல்லாம் படத்துக்குத்தான். நிஜத்தில் வெறும் ஜீரோ என்றெல்லாம் விஜயை விமர்சித்து வருகிறார்கள்.
அந்த ஒரு சீனில் விஜய், ‘யாருடா கோழை? யாரு கோழை? நாற்பது பேர் போகிற படகுல ஆபத்து நேரத்துல ஒருத்தன் குதிச்சு மத்த 39 பேரும் பிழைச்சுக்குவாங்கனா உடனே குதிச்சு அவங்களை எல்லாம் காப்பாத்துறவன்தான்டா வீரன், அரசன், தலைவன்’ என பேசும் போது தன் பக்கம் கையை காட்டி பேசுவார் விஜய். இந்த வசனத்தை கேட்கும் போதே பசுபதி தெனாவட்டில் சிரிப்பார். இந்த ஒரு காட்சியைத்தான் இப்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
