தளபதி 69 படத்துக்கு வரும் ஆபத்து! சும்மா இருப்பாரா தளபதி? அவர் போடும் பக்கா ப்ளான் பாருங்க

தற்போது தமிழ் சினிமாவில் விஜயின் 69 ஆவது படம் நடக்குமா நடக்காதா? என்ற ஒரு கேள்வி எழுந்து வருகிறது. ஏனெனில் அவர் இப்போது அரசியலில் மும்முரமாக இறங்கி இருப்பதால் கோட் திரைப்படம் அவரது கடைசி படமாக இருக்கலாம் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு கொண்டு வருகிறது. ஆனால் சினிமா தயாரிப்பாளர்கள் ஒரு சில பிரபலங்கள் கண்டிப்பாக விஜயின் 69 ஆவது படம் வரும் என்று சொல்கிறார்கள் .

அதுவும் அந்த படத்தை எச் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் தளபதி 69ஆவது படத்தை பற்றி அவருடைய கணிப்புகளை கூறியிருந்தார். அதாவது அவருடைய 69ஆவது படம் அதுவும் எச் வினோத் இயக்கும் அந்த படம் கண்டிப்பாக ஒரு அரசியலை பேசும் படமாக தான் இருக்கும்.

ஏனெனில் விஜய் தைரியமாக அரசியலில் இறங்கி விட்டார். அதனால் ஒரு குறிப்பிட்ட நபரை தாக்கும் படியான செய்தி அந்த படத்தில் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அரசியல் ரீதியாக சில ஆபத்துகள் கூட அந்த படத்திற்கு வரலாம் என விஜய்க்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

அதனால் அவர் சில ஐடியாக்களை வைத்திருக்கிறார் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். தளபதி 69ஆவது படத்தை பொருத்தவரைக்கும் அந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. அதனால் விஜயின் அரசியலால் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அளவில் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து 300 கோடி கடனாக விஜய் கேட்டிருக்கிறார்.

அதாவது தயாரிப்பு என்பதையும் தாண்டி ஒரு பைனான்சியராக அந்த நிறுவனத்தை விஜய் மாற்றி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை இந்த படம் அரசியல் பேசும் படம் ஆக இருந்தால் கண்டிப்பாக அரசியல் ரீதியாக இந்தப் படத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

அது அந்த தயாரிப்பு நிறுவனத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதற்காக இந்த ஒரு ஐடியாவை விஜய் வைத்திருக்கிறார் என்றும் வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். இதை எப்படி அவர் ஈடு செய்கிறார் எனில் 300 கோடி கடனாக பெற்று தங்களிடம் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமம், டிஜிட்டல் உரிமம் இருப்பதால் அது போக என்ன லாபம் வருகிறதோ அதை அந்த நிறுவனமே எடுத்துக் கொள்ளட்டும் என்ற வகையில் இப்படி ஒரு டீலிங்கில் இருக்கிறார் விஜய் என்றும் வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

இப்படி இருந்தால் மட்டுமே ஒரு வேளை அந்தப் படம் அரசியல் ரீதியாக முடக்கப்பட்டால் அது தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்த விதத்திலும் பிரச்சனை வந்துவிடாது என்று சொல்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.

Related Articles

Next Story