விழுப்புரத்துக்கு போக முடியல!.. கோவாவுக்கு போவியா?!.. ட்ரோலில் சிக்கிய விஜய்!...

by Murugan |
vijay
X

vijay

Actor vijay: ஒரு நடிகர் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டாலே அவர்களின் சொந்த வாழ்க்கையை நோண்ட துவங்கவிடுவார்கள். இது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இருக்கிறது. அவரின் இமேஜை குறைக்க அவருக்கு நடிகைகளுடன் தொடர்பு என அப்போதே வதந்திகளை பரப்பினார்கள்.

சினிமாவிலிருந்து ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபோது அவரை மட்டம்தட்ட அவரின் சொந்த வாழ்க்கையில் இருந்த ரகசியங்களை தோண்டியெடுத்து அம்பலப்படுத்தி அவரை அசிங்கப்படுத்தினார்கள். கலைஞர் கருணாநிதியை இன்னமும் அவரின் எதிரிகளின் அவரின் சொந்த வாழ்க்கையை வைத்தே சமூகவலைத்தளங்களில் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது அவரின் கோபம், அவரின் குடிப்பழக்கம் இதை சொல்லி அவரை ட்ரோல் செய்து வந்தார்கள். ஆனால், அவர் குடிப்பழக்கத்தை பல வருடங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள் சொன்னார்கள். ஆனால், யாரும் அதை நம்பவில்லை.

நடிகர் விஜய் இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்து பேச துவங்கிவிட்டார். எனவே, அவரை கூத்தாடி என ஒரு கட்சியை சேர்ந்த ஒருவர் கோபமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியது. சில நடிகைகள் விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தனர். விஜய் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவது பற்றியும் பேசி வருகிறார்கள்.

சமீபத்தில், விழுப்புரம், திருவண்ணாமலையில் அதிக மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டனர். மழையில் நிலச்சரிவு ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 7 பேர் இறந்துபோனார்கள். எனவே, பல கட்சிகளை சேர்ந்தவர்கள் நேரில் சென்று அவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆனால், விஜய் அங்கு போகவில்லை.


ஆனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலரை சென்னையில் உள்ள தனது பனையூர் அலுவகத்திற்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்தார் விஜய். இதை பலரும் கண்டித்தனர். ஒரு துயரமான நேரத்தில் மக்களை நேரில் வந்து சந்திக்காத விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்? என சமூகவலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில்தான், நேற்று கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு விஜய் சென்றிருக்கிறார். நடிகை திரிஷாவுடன் தனி விமானத்தில் அங்கு போய் மணமக்களை வாழ்த்திவிட்டு வந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து ‘விழுப்புரத்துக்கு போக முடியல.. கோவாவுக்கு மட்டும் போவியா?’ என அவரை பிடிக்காதவர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.


Next Story