அண்ணன் வரார் வழிவிடு…விஜய் செய்திருக்கும் சாதனை… கிட்ட டச்சு கூட பண்ண முடியாத ஹீரோக்கள்..

Vijay: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர் விஜய் செய்திருக்கும் சாதனை குறித்த ஒரு முக்கிய அப்டேட் இணையத்தில் கசிந்திருக்கிறது.

பொதுவாக ஒவ்வொரு நேரத்திலும் ஒரு நடிகர் மிகப்பெரிய உச்சத்தில் இருப்பார். ஆனால் அவர்களுக்கு புகழ் மட்டுமே இருக்கும் நிலையில் வசூலில் சாதிக்க முடியாமல் தொய்வை சந்தித்து இருப்பார். இதில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தயாரிப்பாளரையும், ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவர்வார்.

அந்த வகையில் தற்போது இருக்கும் கோலிவுட் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்து இன்னும் ஒரே படத்தில் தமிழ் சினிமாவை விட்டு வெளியேற இருக்கும் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு கவலை அளித்திருப்பதே உண்மை. தளபதி 69 உடன் தன்னுடைய சினிமா காரியங்களில் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக விஜய் களமிறங்க இருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க பல வருடங்களாகவே விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என அழைத்து வருவது வாடிக்கையாக மாறி இருக்கிறது. ஆனால் இது பெரும் வார்த்தை மட்டும் அல்ல உண்மையாகவே அவர் வசூலின் ராஜாவாகத்தான் இருந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் விஜயின் சில திரைப்படங்கள் விமர்சன ரீதியாக கேள்விக்குறியை ஏற்படுத்தினாலும் வசூலில் எந்த குறையும் இதுவரை இருந்ததில்லை. அப்படி தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டுமே 100 கோடி அடித்த படங்களின் எண்ணிக்கையில் விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் செய்த படங்களின் எண்ணிக்கையில் விஜய் எட்டு படங்களும், ரஜினி 3, அஜித் இரண்டு படங்களும் கைவசம் வைத்திருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் 200 கோடி வசூல் செய்த படங்களின் எண்ணிக்கையில் விஜயிடம் மட்டுமே இரண்டு படங்கள் இருக்கிறது. மற்ற எந்த தமிழ் நடிகர்களுமே இதுவரை 200 கோடி வசூலை நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் வரார் வழிவிடு…விஜய் செய்திருக்கும் சாதனை… கிட்ட டச்சு கூட பண்ண முடியாத ஹீரோக்கள்..

Related Articles
Next Story
Share it