வாட் புரோ.. இட்ஸ் ராங்க் புரோ!.. தவெக விழாவில் தெறிக்கவிட்ட விஜய்!....

by Akhilan |   ( Updated:2025-02-26 10:48:42  )
Vijay
X

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடந்து வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசி இருக்கும் வீடியோ வைரலாக பரவி இருக்கிறது.

கோலிவுட்டில் உச்ச நடிகராக இருந்து வந்த நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைக்கப்பட்ட இக்கட்சியின் இரண்டாவது ஆண்டு விழா இன்று தொடங்கி பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் முக்கிய அரசியல் பிரமுகரான பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் விஜய் பேசி இருக்கும் விஷயம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. நம்முடைய அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும்.

அதாங்க பாயாசமும் பாசிசமும் சமூக வலைத்தளங்களில் ஹேஸ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். என்ன பிரச்சனை நடந்துக்கிட்டு இருக்கு. இவங்க சொல்லி வச்சு சண்டை போடுற மாதிரி சண்டை போடுகிறார்கள். வாட் ப்ரோ. இட்ஸ் ராங் ப்ரோ.

இதில் நம் பசங்க உள்ள போயி #TVKforTN என்ற ஹேஸ்டேக்கை போட்டு விட்டு வருகின்றனர். எங்கங்க நீங்களாம் இருக்கீங்க. ஸ்லீப்பர் செல்கள் மாதிரி. நம்ம மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்களுக்கே தற்போது அரசியல் நன்றாக புரிவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வீடியோ பலதரப்பட்ட ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் சென்றாலும் தவெக மாநாட்டில் தற்போது சில சலசலப்புகளும் நடந்து வருவது இணையத்தில் வைரலாகவும் பரப்பப்பட்டு வருகிறது.

Next Story