தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் கோட் செய்த அசைக்க முடியாத சாதனை… டச்சு பண்ண முடியாது!...
Goat: விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. இது பலருக்கு ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் உருவான திரைப்படம் கோட். இப்படத்தில் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, லைலா, அஜ்மல், மைக் மோகன், உள்ளிட்டோர் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பு செய்திருந்தார்.
இப்படத்தின் ரிலீஸ் இருக்கும் முன்னர் இப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியது. டைம் ட்ராவல் படமாக இருக்குமா என பல ஆர்வங்கள் ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க படக்குழு இது சாதாரண அப்பா மற்றும் மகனிடையே நடக்கும் ஈகோ முற்றிய கதைதான் என ஓப்பனாக உடைத்தனர்.
இப்படம் விஜய் ரசிகர்களை கவர்ந்தாலும் மற்ற ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தான் கூறப்படுகிறது. இதனால் கோட் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை விட சற்று குறைந்ததாகவே கூறப்படுகிறது. இருந்தும் படம் முதல் நான்கு நாட்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடியது.
சமீபத்தில் அர்ச்சனா கல்பாத்தி 13 நாட்களில் இப்படம் 418 கோடியை வசூல் செய்ததாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸ் மட்டுமே 200 கோடி வரை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு முன் இதே வசூலை பொன்னியின் செல்வன் மற்றும் லியோ திரைப்படம் மட்டுமே குவித்தது குறிப்பிடத்தக்கது.
2024இல் ஒன்பது மாதங்களை கடந்துவிட்ட நிலையிலும் 200 கோடியை வசூல் செய்த முதல் திரைப்படம் கோட்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல தொடர்ச்சியாக இரண்டு படங்களை தமிழக பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி வரை வசூல் செய்திருக்கும் முதல் நடிகர் தளபதி விஜய் தான் என்பதால் ரசிகர்கள் இதை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.