Categories: Cinema News latest news

Vijay: விஜய் ரசிகர்களின் ரொம்ப வருட ஏக்கம் தீரும் நேரம் வந்தாச்சு… இதான் கடைசி!

Vijay: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் படம் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இன்னொரு ஸ்பெஷல் தகவல் விஜய் ரசிகர்களுக்கு கிடைத்து இருக்கிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக இருப்பவர் விஜய். சமீபகாலமாகவே அவருடைய படங்களில் வாங்கும் சம்பளம் ஒவ்வொரு படத்துக்கும் 50 லட்சமாக உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடைசி படமான ஜனநாயகனில் 275 கோடி வரை சம்பளமாக வாங்கி இருக்கிறார். 

இதுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் கடைசி படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக்கழகத்தை உருவாக்கி அதில் தன்னுடைய ரசிகர்கள் மூலம் ஆச்சரிய விஷயங்களை செய்து அசத்தி வருகிறார். 

இதனால் வரும் தேர்தலில் என்ன நடக்கும் என்ற ஆர்வம் பலரிடமும் இப்போதே எழுந்து இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே விஜயின் படத்துக்கு பெரிய அளவில் ஆடியோ வெளியீட்டு விழா வைப்பதை தவிர்த்து வந்தனர்.

vijay

வாரிசு படத்திற்கு மட்டுமே வைக்கப்பட்டது. இருந்தும் அது பெரிய அளவில் இல்லை. கத்தி, மாஸ்டருக்கு சின்ன அளவில் வைக்கப்பட்டது. பீஸ்ட், லியோ, கோட் படங்களுக்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியே நடத்தப்படவில்லை. ஆனால் இந்த முறை ஒரு நல்ல விஷயம் நடக்க இருக்கிறது. 

விஜயின் கடைசி படம் என்பதால் கண்டிப்பாக ஜனநாயகன் படத்துக்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை பெரிதாக நடத்தவே திட்டமிட்டுள்ளனராம். ஆனால் வெளிநாட்டில் இல்லாமல் தமிழ்நாட்டிலே நடத்த வேண்டும் என்பதே விஜய் தரப்பின் முடிவாக இருக்கிறது. 

ஏனெனில் வெளிநாட்டில் நடத்தி அது அரசியல் பின்னணி பிரச்னையை தரும் என்பதாலும் இந்த முடிவை அவர் எடுத்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அனிருத் கூட்டணி என்பதால் இந்த படத்தின் பாடல்களுக்கும் விஜய் ரசிகர்கள் ஓவர் வெயிட்டிங்கில் உள்ளனர். 

பெரிய அளவில் நடத்தி விஜயின் பேச்சுக்காகவே ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், ஜனவரி 9ந் தேதி படத்தினை வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் பொங்கல் ரிலீஸுக்கு போட்டி அதிகரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

Published by
Shamily