விஜய் பேசிட்டாருல்ல!.. இனிமேதான் அவரைக் குறி வைப்பாங்க... பூச்சாண்டி காட்டும் பிரபலம்!..

by sankaran |   ( Updated:2024-10-28 07:28:21  )
vijay mass speech
X

எனக்கு என்னமோ சர்கார் 2 பார்த்த மாதிரி இருந்தது. நான் வந்து டெம்ப்ளேட் அரசியல்வாதி கிடையாது. டெம்ப்ளேட்டான அரசியலை முன்வைக்கிறதுக்காக இங்கு வரல. அப்படின்னுலாம் சொன்னாரு. அதுல நிறைய மாறுபாடுகள் இருக்கு. நீங்க டெம்ப்ளேட் அரசியல்வாதியா இருக்கக்கூடாது. அதைத் தான் நாங்களும் சொல்றோம்.

ஆனா ஒரு நேரம் டெம்ப்ளேட் இல்லாம இருக்கு. அடுத்த சில காட்சிகள்ல அது மாறுது. மேடையில வந்து ஒருத்தர் குரானைக் கொடுக்காரு. இன்னொருத்தவர் பைபிளைக் கொடுக்காரு. பகவத்கீதையைக் கொடுக்காரு. அடுத்தவர் வாளைக் கொடுக்குறாரு.

விஜய் துணிந்து எதிரி யாருன்னு சொன்னது மிகச்சரியா சொல்லிட்டாரு. ஆனா நாளையில் இருந்து குறி வைக்கப்படுவார். அவரது அழுக்கு எல்லாவற்றையும் அள்ளி வெளியே கொண்டு வந்து போடுவாங்க.

அதெல்லாம் தெரிஞ்சி தான் அவர் மேடையில அப்படி ஆவேசமா சொல்லிருக்காரு. திராவிட மாடல்னு மோடி மஸ்தான் வேலையைக் காட்டி ஒண்ணும் நடக்கப்போறதில்லைன்னு திமுகவைப் பட்டவர்த்தனமா சுட்டிக் காட்டிருக்காரு. யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லலையே. பட்டும் படாமலும் சொல்லிட்டுப் போறாரேன்னு நினைக்காதீங்க.

எனக்கு என்ன பயமான்னு கூட கேட்டாரு. யாரு பெயரையும் சொல்லி நான் அசிங்கப்படுத்த விரும்பலை. அவ்வளவு மலிவான அரசியல் சார்ந்த பேச்சை நான் எங்கேயும் பேச மாட்டேன்னு சொன்னாரு. ஆனா அடுத்த மாநாட்டில் நிச்சயம் இது மாறும். பல விஷயங்கள் நடக்கும்.


ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பட மாட்டோம். மற்ற கருத்துகளை நாங்க பின்பற்றுவோம். என் மேல பெயிண்ட் அடிக்கலாம்னு நினைக்காதீங்க. ஏ டீம், பி டீம்ங்கற வேலையை எல்லாம் வச்சிக்காதீங்கன்னு டைரக்டா ஒன்றிய அரசை அடிக்கிறாரு. ஆளுநர் பதவியை ஒழிக்கணும்னு தைரியமா சொல்றாரு. அதே மாதிரி கூத்தாடிங்கற வார்த்தை அவரை ரொம்பவே பாதிச்சிருக்கு.

ஆரம்பகாலத்துல பட்ட அவமானங்களை சொல்லி எப்படி முன்னேறினேன்னு ஆவேசமா சொன்னாரு. கடைசில ஒரு விஷயத்தை முன்வைச்சாரு. என் தலைமையில் கூட்டணி அமைந்தால் அதிகாரப்பகிர்வு நிச்சயம்னு சொன்னாரு.

பல புத்தகங்களைப் படிச்சிக்கிட்டு பொன்மொழிகள் பேசுறதுலாம் நமக்கு வராது. நமக்கு ஸ்ட்ரெயிட்டா அடிப்போம்னு சொல்லி சீமானையும் ஒரு தட்டு தட்டுறாரு. சீமான் இங்கு வந்து சேருவாரான்னும் ஒரு பேச்சு இருக்கு. இலவசங்களை எதிர்ப்பாரா, ஆதரிப்பாராங்கற குரலும் இருக்கு. மீன்பிடிக்கவும் கத்துக் கொடுப்போம்.

மீனையும் கொடுப்போம்னு சொல்றாரு. சோஷியல் மீடியா ட்ரோலுக்கும் நான் ரெடி. ஒரு முடிவோடு தான் வந்திருக்கேன். பின்வாங்க மாட்டேன்னும் தெளிவா சொல்லிருக்காரு. ரேம்ப்ல நடக்கும்போது கூட்டத்தைப் பார்த்ததும் ஓடுனாரு. துண்டைத் தூக்கிப் போட்டதும் அதைக் கேட்ச் பிடிச்சித் தோள்ல போட்டுட்டு உற்சாகத்துல ஓடுனது அய்யனார் வந்த மாதிரி இருந்தது. கொஞ்சநேரம் நடக்காரு. கொஞ்சநேரம் ஓடுறாரு.

இப்படி நடக்குறது சினிமாவே பார்த்த மாதிரி இருந்தது. அவர்களே இவர்களே வேணாம்னு சொல்றதும் நல்லா தான் இருக்கு. ஆனா விஜய் நாளை முதல் இந்த எதிர்ப்பை எல்லாம் எப்படி சமாளிக்கப் போறாருன்னு தெரியல. மக்களுக்கே தெரியாத நாலு பேரை வச்சிக்கிட்டு மக்கள் நிரம்பிய கூட்டத்தைத் திரட்டியிருக்கறது தான் விசேஷம்.

அவர் விசிலடிச்சான் குஞ்சுகளாக இருக்கக்கூடாதுன்னு சொல்றாரு. ஆனா அங்க ஒரு பக்கம் லைட் கம்பத்துல, பேனர்ல ஏறுறாங்க. அது கொஞ்சம் நெருடலாத் தான் இருக்கு. பாம்பைப் பார்த்து குழந்தை சிரிக்கும். அதுக்குப் பயம்னா என்னன்னு தெரியாது. அந்தக் குழந்தை தான் நான்னு சொல்லிட்டாரு. தெரிஞ்சோ தெரியாமலோ பாம்பைக் கையில புடிச்சிட்டாரு. அது கொத்தப் போகுதா, கொஞ்சிக் குலாவப் போகுதான்னு இனிமே தான் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story