தளபதி69ல் மீண்டும் மட்ட பிரபலம்… அப்போ அடுத்த ஹிட்டுக்கு ரெடியாகிடுங்க!..
Thalapathy69: விஜயின் கடைசி திரைப்படமான தளபதி 69 குறித்த அப்டேட்கள் நேற்றில் இருந்து கசிந்து வரும் நிலையில் தற்போது ஒரு சுவாரசிய அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தளபதி 69 படத்துடன் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார். இப்படத்தை முடித்துக் கொண்டு அவர் தன்னுடைய அரசியல் கட்சி பணிகளில் ஈடுபட இருக்கிறார். இதனால் கடைசி திரைப்படமான தளபதி 69 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
இப்படத்தை கேபிஎன் நிறுவனம் தயாரிக்க ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். இப்படத்தில் நடிக்க இருக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்புகள் நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பாபி தியோல் குறித்த அறிவிப்பு கேவிஎன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
இன்று நடிகை குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் பூஜை வரும் அக்டோபர் நான்காம் தேதி நடக்க இருக்கிறது. அதை தொடர்ந்து அக்டோபர் ஐந்தாம் தேதியில் இருந்து படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக இப்படத்தின் முதல் பாடல் ஷூட்டிங் தான் நடக்க இருக்கிறதாம். குத்து பாடலாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்பாடலுக்கு பாடலுக்கு நடன இயக்குனர் சேகர் தான் கோரியோகிராப் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோட் திரைப்படத்தில் மட்ட பாடலை இயக்கி இருந்தார். அப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ஹிட்டை கொடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜயின் அடுத்த திரைப்படத்திற்கும் அவருக்கு வாய்ப்பு இருப்பதால் மேலும் ஒரு ஹிட் பாடல் ரசிகர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இப்படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்றே கூற வேண்டும்.