கோட்-லாம் சும்மா!. லப்பர் பந்துதான் பெஸ்ட்!.. கேப்டன் மகன் என்ன சொல்றார் பாருங்க!...

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் வெற்றியை சமீபத்தில் தான் பட குழு சென்னையில் கொண்டாடியது.

படத்தில் கெத்து என்ற பெயரில் அட்டகத்தி தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகராக நடித்திருப்பார். படத்தில் கூட அவரை அறிமுகப்படுத்தும் போது விஜயகாந்த் நடித்த பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் ஒலிக்க மாசாக காட்டியிருப்பார்கள் அட்டகத்தி தினேஷ் அறிமுகத்தை.

அந்தப் பாடல் ஒலிக்கும் பொழுது திரையரங்கமே ஆரவாரத்தில் ஆர்ப்பரித்தனர் அந்தளவுக்கு விஜயகாந்த் பாடல் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை படக்குழு விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அவருக்கு மலர் வளையம் வைத்து ஆசீர்வாதம் பெற்றனர்.

அதனை அடுத்து அவருடைய அலுவலகத்திற்கும் சென்று பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து ஸ்ரீயும் தெரிவித்தனர் இந்த நிலையில் பிரேமலதா சமீபத்தில் ஒரு அறிக்கை ஒன்றை அறிவித்தார் .அதாவது விஜயகாந்தியின் பாடலையோ இசையையோ பயன்படுத்தினால் காப்புரிமை கேட்க மாட்டோம்.

அவர் மக்களின் சொத்து என கூறியிருந்தார். இந்த நிலையில் அவருடைய மகன் விஜய பிரபாகரனும் லப்பர் பந்து படத்தில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட பாடலை பற்றி அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதாவது ஒரு சில படங்களில் விஜயகாந்த் குறியீடுகள் பெயர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் லப்பர் பந்து படத்தில் கேப்டன் முழுவதுமாக நிறைந்திருந்தார். கேப்டனின் உண்மையான ரசிகர் எப்படி இருப்பாரோ அதைப்போல இந்த படத்தில் கேப்டன் ரசிகராகவே அட்டகத்தி தினேஷ் வாழ்ந்திருந்தார் என விஜய பிரபாகரன் கூறியிருக்கிறார் .

இதற்கு முன் விஜய்காந்துக்கு டிரிப்யூட்டாக கோட் திரைப்படத்தில் அவரை ஏ ஐ மூலமாக பயன்படுத்துகிறோம் எனக் கூறி வெறும் மாஸ்கை வைத்து பயன்படுத்தியது போல வெங்கட் பிரபு திரைப்படத்தில் விஜயகாந்தை காட்டி இருப்பார் .ஆனால் லப்பர் பந்து படத்தில் அவருடைய ஒரு பாடல் காட்சி மற்றும் அவருடைய ரசிகர் என்ற கதாபாத்திரம் இவை இரண்டுமே ஒட்டுமொத்த விஜயகாந்த் ரசிகர்களையும் ஈர்த்து இருக்கிறது என்று தன் சொல்ல வேண்டும்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it