ஆடு பகை குட்டி உறவா?.. விஜய்யை சந்தித்த பிரபலத்தின் பேத்தி..!
நடிகர் விஜய்: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். தற்போது தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை முடித்த கையோடு சினிமாவிலிருந்து விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து பின்னர் தனது கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையுமே மிகச் சிறப்பாக நடத்தி முடித்து இருக்கின்றார். ஒரு பக்கம் தனது கடைசி படத்தில் பிஸியாக நடித்து வந்தாலும் மற்றொருபுறம் அரசியல் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார் நடிகர் விஜய். தளபதி 69 திரைப்படத்தின் முதல் ஷெடியூல் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த ஷெடியூல் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கின்றது.
ராமதாஸ் பேத்தி சந்திப்பு:
இந்நிலையில் விஜயை அவரின் இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளும், ராமதாஸ் அவர்களின் பேத்தியுமான சங்கமித்ரா நேரில் சந்தித்திருக்கின்றார். இது தொடர்பான புகைப்படம் தான் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது.
அலங்கு படத்தின் டீசர்:
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா தற்போது அலங்கு என்ற திரைப்படத்தை தமிழ் சினிமாவில் தயாரித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை எஸ்பி சக்திவேல் இயக்கியிருக்கின்றார். தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் நடக்கும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்த இந்த திரைப்படம் உருவாகி இருக்கின்றது.
இதில் ஒரு நாய்க்கும் மனிதனுக்கும் இடையேயான எமோஷனலான விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றது. இந்த படத்திற்கு அலங்கு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இப்படம் வரும் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படத்தின் ரிலீஸ் ப்ரோமோவை நடிகர் விஜய் வெளியிட்டு இருக்கின்றார்.
இன்று படக்குழுவினர் மற்றும் சங்கமித்ரா அனைவரும் விஜயை நேரில் சந்தித்து அலங்கு படத்தின் டிரைலரை போட்டுக்காட்டி அவரிடம் இருந்து வாழ்த்து பெற்றிருக்கிறார்கள். பின்னர் அனைவரும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் தான் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
ஆடு பகை குட்டி உறவு:
ராமதாஸ் அவர்களின் பேத்தி சங்கமித்ரா சமீபத்தில் நடிகர் ரஜினியை சந்தித்தபோது பல கேள்விகள் எழுந்தது. ஒரு காலத்தில் ரஜினியை ஓட ஓட விரட்டினீர்கள். ஆனால் தற்போது அவரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறீர்கள் என்று விமர்சனம் வந்தது. அதேபோல நடிகர் விஜய்க்கும் சில எதிர்ப்பு குரல்களை எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள்
அதிலும் அவர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் படங்களில் இடம்பெறும் போது அதற்கு பாமக சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் வந்திருக்கின்றது. ஆனால் பேத்தி அதையெல்லாம் சொல்லாமல் அவருக்கு டீசரை போட்டு காட்டி அவருடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆடுபகை குட்டி மட்டும் உறவா என்று சமூக வலைதள பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.