தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது மீண்டும் பழைய விஜய் சேதுபதியை தேடி வருகின்றனர். முன்னல்லாம் விஜய் சேதுபதி திரைப்படம் குறைந்தது மாதத்திற்கு ஒரு திரைப்படமாவது வெளியாகி விடும். தற்போது தான் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெகு நாட்கள் கழித்து வெளியாகியிருந்தது. அதற்கு பிறகு அவர் கதாநாயகனாக நடித்த திரைப்படம் மாமனிதன் அடுத்த மாதமோ அல்லது அதற்கடுத்த மாதமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், விஜய் சேதுபதி தமிழ் சினிமாவை தவிர்த்து மற்ற மொழி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக ஒரு பேச்சு உலா வருகிறது. அதுவும் குறிப்பாக பாலிவுட் பக்கம் தனது கவனத்தை அதிகம் திசைதிருப்பி வருகிறாராம்.
ஏற்கனவே பாலிவுட்டில் மாநகரம் ஹிந்தி ரீமேக், காந்தி டாக்ஸ் அதற்கு அடுத்ததாக காத்ரீனா கைஃப் உடன் நடிக்கும் மேரி கிறிஸ்மஸ் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அதேபோல மேலும், 2 ஹிந்தி படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
அதன் காரணமாக தமிழ் இயக்குனர்களில் அவருக்கு நெருக்கமாக இருந்த பல இயக்குனர்கள் கூட விஜய் சேதுபதியிடம் கால்சீட் கேட்டு வருகின்றனராம். ஆனால், விஜய் சேதுபதி அதற்கு இன்னும் இசைந்து கொடுக்கவில்லையாம்.
இதற்கிடையில் விஜய் சேதுபதியிடம் 96 பட இயக்குனர் பிரேம் குமார் ஒரு கதையை கூறி அது விஜய் சேதுபதிக்கும் பிடித்து போனதாம். இதனை ஒரே ஷெட்யூலில் எடுத்து முடித்து விடலாம். நான் மொத்தமாக படத்திற்கு கால்ஷீட் தருகிறேன் என்று விஜய் சேதுபதி உறுதி அளித்துள்ளாராம்.
இதையும் படியுங்களேன் – மீண்டும் அதே உருட்டு.! அஜித்-61 படம் பற்றி போனி மாம்ஸ் என்னென்ன சொல்றார் பாருங்க..,
இதனை அறிந்த சினிமா வட்டாரம், அவரிடம் முதலில் கால்சீட் வாங்குங்கள். அவர் கால்சீட் தருகிறேன் அதுவும் மொத்தமாக தருகிறேன் என்று கூறலாம். ஆனால், அவரின் பிஸி ஷெடியூலில் கால்ஷீட் தருவது கடினம். ஆதலால் இந்த விஷயத்தில் அவரை நம்பாதீர்கள் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
என்ன இருந்தாலும் 96 பட சமயத்தில் விஜய்சேதுபதிக்கு தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்து வந்தார். விஜய் சேதுபதி சோலோ ஹீரோவாக நடித்த 96 திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆதலால் பிரேம் குமார் அவர்களுக்கு நிச்சயம் விஜய் சேதுபதி வாய்ப்பு கொடுப்பார் என்று சிலர் கூறி வருகின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…