ஏஸ் படத்துல சிவகார்த்திகேயன் ரெஃபரன்ஸ் நான் வைக்கல!.. தக் லைஃப் பதில் கொடுத்த விஜய் சேதுபதி!..

எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினிகாந்த் - கமல்ஹாசன், விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு மாதிரி சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி போட்டி சினிமாவை உருவாக்க பலரும் ஆரம்பத்தில் இருந்து முயற்சி செய்தாலும் இருவரும் இதுவரை தொடர்ந்து ஒற்றுமையாகவே நடிக்கின்றனர். தங்கள் படங்களில் மாற்றி மாற்றி ரெஃபரன்ஸ்களையும் உதவிகளையும் செய்து கொள்கின்றனர்.
மாவீரன் படத்தில் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் பெரிய பலமாக அமைந்தது. இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள ஏஸ் படத்தில் சிவகார்த்திகேயன் ரெஃபரன்ஸ் வைத்தது குறித்த கேள்விக்கு இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி அந்த ரெஃபரன்ஸை தான் வைக்கவில்லை என பேசியுள்ளார்.
ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் விஜய் சேதுபதி, ருக்மினி வசந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் திரைப்படம் அடுத்த வாரம் 23ம் தேதி வெளியாகிறது. விஜய் சேதுபதிக்கு கடைசியாக கடந்த ஆண்டு வெளியான 50வது படமான மகாராஜா படம் ரொம்ப நாள் கழித்து வெற்றிப் படமாக மாறியது.
மீண்டும் ஏஸ் படத்தின் மூலம் வெற்றியை ருசிப்பாரா? அல்லது பழையபடி தோல்வியை சந்திப்பாரா என்பதெல்லாம் படம் வெளியான உடனே பட்டவர்த்தனமாகிவிடும். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் ஹீரோயினாக நடித்த ருக்மினி வசந்த் தான் இந்த படத்திலும் ஹீரோயின். கன்னடத்தில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் ரெஃபரன்ஸ் டிரைலரில் இடம்பெற்ற நிலையில், பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி அது யோகி பாபுவோட டைமிங். சிவா மட்டுமில்லை இன்னும் இரண்டு ஹீரோ பெயர்களை கூட வரும். அந்த ஐடியா என்னோடது இல்லை என வெளிப்படையாக பேசியுள்ளார்.
எப்படி இருந்தாலும் அந்த பெயர் வேண்டாம் என விஜய் சேதுபதி மறுத்து இருந்தால் நிச்சயம் இடம்பெற்றிருக்காது. டிரைலரில் வரும் அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு விஜய் சேதுபதி முக்கியத்துவம் கொடுத்துள்ள விஷயம் நல்ல விஷயம் என்கின்றனர்.