பாண்டிராஜ் படத்துக்கு ஓவர் வொர்க்அவுட் போலயே!.. சமையல்ல விதவிதமா பின்றாரே விஜய் சேதுபதி..
நடிகர் விஜய் சேதுபதி: தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக மாற்றும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தொடர்ந்து சரியாக பயன்படுத்திக் கொண்ட விஜய் சேதுபதி அடுத்தடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.
ஹீரோ மட்டுமில்லாமல் வில்லன், வயதான கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம் என எந்த ஒரு ரோலாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடித்து மிரட்டி வருகின்றார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், ரஜினி, கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மிகப்பெரிய பாராட்டைப் பெற்றார்.
தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இனி வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்த விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்தின் மூலமாக மீண்டும் ஹீரோவாக கம்பேக் கொடுத்தார்.
விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளியான இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து தனது கைவசம் ஏஸ், டிரைன் உள்ளிட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார்.
நேற்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இரண்டு திரைப்படங்களில் இருந்தும் வீடியோக்கள் வெளியாகி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
மேலும் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் ஒரு புரோட்டா மாஸ்டராக நடித்து வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படம் தொடர்பான அப்டேட் வெளியான நிலையில் விஜய் சேதுபதி 20 தினங்களாக எப்படி புரோட்டா செய்வது, போடுவது, தட்டுவது என அனைத்தையும் பயிற்சி பெற்று கற்றுக் கொண்டார்களாம். இந்த கேரக்டருகாக மிகவும் யூனிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த விஷயத்தை கற்றுக் கொண்டதாக கூறியிருந்தார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படம் குறித்து மிக நகைச்சுவையாக பேசி இருக்கின்றார். இதில் நடிகர் விஜய் சேதுபதியின் சமையல் கலையை பார்த்து அங்கிருந்த பலரும் சிரித்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் இந்த திரைப்படத்தில் நான் பரோட்டா மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன். பரோட்டா போடுவதற்கு கற்றுக் கொண்டேன். அதை தாண்டி டிபரென்ட் காம்பினேஷனில் ரெசிபி செய்வதற்கும் கற்றுக் கொண்டேன். அதாவது வாட்டர் மெலன் பரோட்டா, பைனாப்பிள் பரோட்டா, பரோட்டா பொங்கல் மற்றும் காபி தோசை போன்றவற்றை செட்டில் செய்து அசத்தியிருந்தோம்.
நானும் நித்யா மேனனும் சேர்ந்து செய்த இந்த ரெசிபிகள் அனைத்தும் பிரமாதமாக வந்தது என்று அவர் பேசியிருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதி சமையல்ல விதவிதமா செஞ்சு அசத்துறாரே என்று கமெண்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள்.