வாங்கிய சம்பளத்தைத் திருப்பிக் கொடுத்த விஜய்சேதுபதி... அட அது அந்தப் படமா?

விஜய்சேதுபதி, நித்யாமேனன் நடிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படம் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தனது திரையுல அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். வாங்க பார்க்கலாம்.
தலைவன் தலைவி படத்தைப் பொருத்தவரை இந்தக் கேரக்டரில் விஜய்சேதுபதியைத் தவிர வேறு யாரையும் நினைச்சிக்கூடப் பார்க்க முடியாது என்றார். நல்ல ஸ்கிரிப்ட் கேட்டாலே எனக்குப் பயம் வந்துடும். என்னை எல்லாம் நம்பாதீங்க சார். நான் நல்லா நடிச்சிடுவேன்னு அப்படின்னு டைரக்டர் பாண்டிராஜ் சார்கிட்ட பல முறை சொல்லிருக்கேன்.
ஆனா அவருக்கு என் மேல நிறைய நம்பிக்கை இருந்துச்சு. அந்தக் கதையின் நாயகன் நானே இருக்குறதால எனக்குப் பொறுப்பு கூடுதலா இருக்கும். ஹீரோ கேரக்டரைச் சுற்றித்தான் அந்தக் கதையே இருக்கும். ஆகாசவீரன் என்ற கேரக்டருக்கு மாற ஒரு வாரம் ஆனது. ஒரு நீளமான டயலாக்கை 3 நாளா படிச்சித் தான் நடிக்க முடிஞ்சது என்கிறார் விஜய் சேதுபதி.
96 படத்தைப் பற்றி விஜய் சேதுபதி சொல்லும் போது அது ஒரு அற்புதமான படம். யாரு படிச்சாலும் அதுல நடிக்க ஆசைப்படுவாங்க. பிரேம்குமாரோட ரைட்டிங் பிரமாதமா இருக்கும். இன்னும் 2 கதையை சொல்லிருக்காரு. அந்தப் படம் ஒர்க் பண்ணும்போது இவ்ளோ பேருக்குக் கனெக்ட் பண்ணும்னு தெரியாது.

இன்னும் வரைக்கும் எல்லாருக்கும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணின படம். நான் அந்தப் படத்தை எதிர்பார்க்கல. அந்தப் படம் ரிலீஸ் அன்னைக்கு நைட் ஃபுல்லா பஞ்சாயத்து போனது. ரிலீஸ் ஆகுமா, ஆகாதான்னு பெரிய பஞ்சாயத்து. நான் வாங்கின சம்பளத்தைத் திருப்பிக் கொடுத்துட்டேன். எனக்கு படம் ரிலீஸ் ஆகி மக்கள்கிட்ட போய்ச் சேர்ந்தால் போதும்னு தான் இருந்தது.
ஆனா அதுக்குக் கிடைச்ச வரவேற்பு எல்லாத்தையும் மறக்கடிச்சிடுச்சு. நான் எதிர்பார்க்காத அளவுக்கு மக்களைப் போய்ச் சேர்ந்தது ஆச்சரியம் என்கிறார் விஜய் சேதுபதி.