சூரிய மாஸ் ஹீரோவா மாத்த படாதபாடு பட்ட வெற்றிமாறன்!.. பெருமையாக சொன்ன VJS!..
Actor Soori: தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சூரி திடீரென்று ஹீரோவாக அவதாரம் எடுத்தார். விடுதலை என்ற திரைப்படத்தின் மூலமாக சூரியக்குள் இருந்த ஒரு நடிகரை வெளியில் கொண்டு வந்திருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன் இந்த திரைப்படம் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
விடுதலை:
விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் சிறப்பாக அமைந்தது. இதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது.
விடுதலை 2:
முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த திரைப்படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கின்றார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியார், சூரி, கென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் பெருமளவு நடிகர் சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் சூரி, மஞ்சு வாரியர், விஜய் சேதுபதி ஆகியோர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருந்தார்கள். விடுதலை 2 திரைப்படத்தின் சுவாரசியங்கள் பற்றியும், இயக்குனர் வெற்றிமாறன் பற்றியும் பேசி இருந்தார் விஜய் சேதுபதி.
ஹீரோவான சூரி:
விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் சூரியை ஹீரோவாக மாற்றுவதற்கு விஜய் சேதுபதி என்னென்ன செய்தார் என்பதை விஜய் சேதுபதி பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'இந்த திரைப்படத்தில் முதலில் தன்னை கைது செய்வது போன்ற காட்சிகள் இடைவெளியின் போது வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் படத்தை மேலும் சிறப்பாக கொடுக்க வேண்டும். அதிலும், நடிகர் சூரி காமெடி நடிகர் என்கின்ற இடத்திலிருந்து மாஸ் ஹீரோவாக மாற்ற வேண்டும் என்பதற்காக அந்த காட்சியை கிளைமாக்ஸ் சீனில் வைத்தார் வெற்றிமாறன். இந்த படத்தின் மூலம் நடிகர் சூரி ஹீரோவாக என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில் அவரை மாஸாக காட்ட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் வெற்றிமாறன்.
மேலும் சூரி பல்டி அடிக்கும் காட்சி முதலில் ரொம்ப சாதாரணமாக எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அதை மாஸாக்கி காட்டி இருந்தார் வெற்றிமாறன்' என்று பகிர்ந்திருந்தார். இந்த பேட்டியானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. சூரியை ஹீரோவாக மாற்றுவதற்கு பல மெனக்கெடல்களையும், மாற்றங்களையும் படத்தில் செய்து இருக்கின்றார் இயக்குனர் வெற்றிமாறன்.