விஜய் சேதுபதி சொன்ன அந்த வார்த்தை!. அசால்ட் பண்ண ரெடியான சூர்யா!...
விஜய்சேதுபதி இப்போது பிக்பாஸ் சீசனில் மும்முரமாக இருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாம், இந்தி, தெலுங்குன்னு பல படங்களில் பிசியாகவும் நடித்து வருகிறார். அவரது மகனும் இப்போது படம் நடிக்கப் போறாருங்கறது தான் ஆச்சரியம்.
அவரது மகன் சூர்யா. இவர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் வீழான் என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. யாராண்ட என்ற பாடலும் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியின் மகன் என்றதும் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளார் சூர்யா.
சாம். சிஎஸ்.இசை அமைத்துள்ளார். படத்தின் பெயரே புதுமையாக உள்ளது. அதனால் ஏதாவது ஒரு விஷயம் இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் நடிக்க வந்தது எப்படின்னு சூர்யாவே சொல்றார் பாருங்க.
நான் ஹீரோவாக நடிக்க போறோம்னு முடிவானதும் எனக்கு பயமா இருந்துச்சு. ஏன்னா நான் 120 கிலோ இருந்தேன். நாம அசிங்கமா இருக்கோம். மூஞ்செல்லாம் நல்லா இல்லன்னு என் மேல நம்பிக்கை இல்லாம இருந்தப்ப, அப்பா தான் 'பண்றா பாத்துக்கலாம்'னு சொன்னார்.
அவரோட அந்த வார்த்தை தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது என்று சொல்கிறார் சூர்யா. மக்கள் செல்வன் என்று பெயர் வைத்தது பொருத்தம் தான். அதனால் தான் அவர் தம் மக்களாகிய பிள்ளைச் செல்வங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடக்கூடாது. அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்பதற்காக உற்சாகம் ஊட்டியுள்ளார் போல.
ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த நானும் ரௌடி தான், சிந்துபாத் படங்களில் சின்ன கேரக்டர்களில் சூர்யா நடித்துள்ளார். இந்தப் படம் ஆக்ஷன் கலந்த ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. திரையரங்குகளில் நவம்பர் 14ல் ரிலீஸ். கங்குவா படமும் இதே நாளில் தான் வெளியாகிறது. அப்பாவின் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று தான் சூர்யா முடிவெடுத்துள்ளாராம். அதனால் தான் படத்தில் பெயரைக் கூட சூர்யா என்றே வைத்து விட்டாராம்.