பாண்டிராஜ்கூட வேலையே செய்யக்கூடாது!.. தலைவன் தலைவி விழாவில் விஜய் சேதுபதி ஷாக்!..

Thalaivan Thalaivi: தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. வித்தியாசமான கதைகளில் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இவரின் படங்களில் வழக்கமாக மற்ற ஹீரோக்கள் செய்யும் ஹீரோயிசங்கள் இருக்காது.
ஆக்ஷன் காட்சிகளோ, பன்ச் வசனங்களோ இருக்காது, காதல், ரொமான்ஸ் காட்சிகளும் இருக்காது. ஆனால், அழகான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துவிடுவார். அதனாலேயே விஜய் சேதுபதியை பலருக்கும் பிடித்துப்போனது. விஜய் சேதுபதி இதுபோன்ற படங்களில் மட்டுமே நடிக்கவேண்டும் என சீனு ராமசாமி போன்ற இயக்குனர்களே கோரிக்கை வைத்தனர்.
ஒரு வருடத்தில் அதிக படம் நடிக்கும் நடிகராகவும் விஜய் சேதுபதி மாறினார். இவரின் நடிப்பில் 2 வாரங்களுக்கு ஒரு படம் வெளியானது. அது ட்ரொலில் சிக்கியதால் ஒரு கட்டத்தில் அப்படி நடிப்பதை குறைத்துகொண்டார். மேலும், மாஸ்டர் படம் மூலம் வில்லன் நடிகராகவும் மாறினார். அதிலும் தனது தனித்திறமையை காட்டினார். அதன்பின் விக்ரம், ஜவான் என தொடர்ந்து வில்லனாக கலக்கினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார்.

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடித்த மகாராஜா படம் ஹிட் படமாக அமைந்தது. இந்த படம் சீன மொழியில் கூட வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘தலைவன் தலைவி’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 25ம் தேதி ரிலீஸாகவுள்ளது. எனவே, படக்குழு புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி ‘இந்த படம் துவங்குவதற்கு முன்பு எனக்கும் பாண்டிராஜுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு ‘இவர் படத்துல நடிக்கவே கூடாது’ நான் நினைத்தேன். அவரும் அப்படியே நினைத்தார். ஆனால், எங்களுக்கு சொந்த பிரச்சனையோ, பகையோ எதுவுமில்லாதால் ஒரு கட்டத்தில் கோபம் அன்பாக மாறி இந்த படம் துவங்கப்பட்டது. பாண்டிராஜை எனக்கு 2009ம் வருடம் முதலே தெரியும். நான் எனது தென்மேற்கு பருவக்காற்று படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு அவரை அழைக்க சென்றபோதுதான் பசங்க படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது’ என பேசியிருக்கிறார்.