வடசென்னை படத்தில் விஜய் சேதுபதியா?.. இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு.. அவரே சொல்லிட்டாரே!..
நடிகர் விஜய் சேதுபதி:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வில்லன், கேரக்டர் ரோல், ஹீரோ என நடித்து அசதி வருகின்றார்.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து இவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் பேட்ட, விக்ரம் தொடங்கி ஜவான் திரைப்படம் வரை தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தார். இதனால் இவருக்கு ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைய தொடங்கியது.
இதன் காரணமாக ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இனிமேல் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவு எடுத்த விஜய் சேதுபதி தனது 50-வது படமான மகாராஜா திரைப்படத்தின் மூலமாக மீண்டும் ஹீரோவாக கம்பேக் கொடுத்தார். இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தற்போது சைனாவிலும் சக்க போடு போட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.
வெற்றிமாறனின் விடுதலை:
நடிகர் சூரி, பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் 2-வது பாகம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரியை காட்டிலும் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
விஜய் சேதுபதியின் பழைய கால வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். இப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் இறங்கி இருக்கிறார்கள்.
வடசென்னை படம்:
விடுதலை திரைப்படத்தின் புரமோஷனுக்காக பல youtube நிகழ்ச்சிகளுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார் விஜய் சேதுபதி. அப்போது வெற்றிமாறன் குறித்தும் அவரது இயக்கத்தில் பணியாற்றியது குறித்தும் பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'முதலில் பொல்லாதவன் திரைப்படத்தை பார்த்துவிட்டு இவரின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
இதனால் ஆடுகளம் திரைப்படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து வடசென்னை திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த சமயத்தில் டேட் பிரச்சனை காரணமாக அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
பின்னர் விடுதலை திரைப்படத்தில் வெறும் 8 நாட்கள் மட்டுமே என்னிடம் கால்சீட் கேட்டிருந்தார்கள். அப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் என்கிற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். விக்கியிடம் இது போன்று நடிக்க வேண்டும் என்று கூறியதற்கு அவரும் சம்மதிக்க அப்படத்தில் நடிக்க சென்றேன். ஆனால் அந்த 8 நாட்களும் எனக்கு டெஸ்ட் சூட் மட்டும்தான் நடந்தது.
பின்னர் அது விரிவடைந்து 160 நாட்களாக மாறிவிட்டது. கட்டாயம் அந்த எட்டு நாட்களில் வெற்றிமாறன் படத்தை எடுத்து விட்டு என்னை அனுப்பி இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். ஏனென்றால் அவரிடம் இருந்த நாட்களில் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அது என் வாழ்க்கைக்கு நிச்சயம் உதவும்' என்று பேசி இருக்கின்றார்.