கூப்ட்டு குடிக்க வச்சு செய்வாரு… ஓபனாக பேட்டியில் சொன்ன விஜய் சேதுபதி… யாரை சொல்றாரு?
Vijay Sethupathi: நடிகர் விஜய் சேதுபதி தற்போது கலந்துக்கொண்டு இருக்கும் பேட்டி ஒன்றில் தன்னுடைய சக நடிகர் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக விஜய் சேதுபதி ரொம்ப கலகலப்பான நபர். எதிலுமே யோசிக்காமல் தன்னுடைய ஒன் லைனர்களால் ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பது வழக்கம். அப்படி ஒரு நடிகர் கோலிவுட்டில் ஆச்சரியம் தான். தற்போது தன்னுடைய 51வது படத்தின் ரிலீஸ் வேலைகளில் இருக்கிறார்.
இன்னும் சில படங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி வெற்றிகரமாக பிக்பாஸ் தமிழ் சீசன் 8ஐ தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடிகர்கள் கலந்துக்கொண்ட ரவுண்ட் டேபிள் கான்ப்ரன்ஸ் ஒன்றில் கலந்துக்கொண்டு இருக்கிறார்.
அதில் விஜய் சேதுபதியுடன், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், உன்னி முகுந்தன், சித்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருக்கின்றனர். இந்த வீடியோ பேட்டியின் புரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் விஜய் சேதுபதி பேசிக்கொண்டு இருக்கும் போது அரவிந்த் சாமி மற்றும் பிரகாஷ் ராஜ் நமட்டு சிரிப்பை சிரிக்கின்றனர்.
இதை பார்க்கும் விஜய் சேதுபதி சார் இவர் பேட்டியை ஸ்பாயில் பண்ணுறாரு சார். வெளியில நிறுத்துங்க சார் என சிரித்துக்கொண்டே சொல்கிறார். இவரு எப்பையுமே இப்படிதான் என அரவிந்த் சாமியை சிரித்துக்கொண்டே கைக்காட்ட அருகில் இருந்த மற்ற நடிகர்களும் சிரித்து விடுகின்றனர்.
இன்னொரு புரோமோவில் நடிகர் விஜய் சேதுபதியை பார்த்து அருகில் இருக்கும் நடிகர் பயப்படுவதாக அரவிந்த் சாமி கூற அவர் இல்ல. அவருக்கு என்னை பிடிக்கும். நான்தான் உங்க மேல பயத்தில இருப்பேன் சார். நீங்க தான் அதை பண்ணுவீங்க. எனக்கு கால் பண்ணி வரச் சொல்லுவாரு.
'குடிச்சிட்டு 3 மணி நேரம் ஒரே கிளாஸா எடுப்பாரு. சில டைம் காலையில் வரை செல்லும்' எனவும் சிரித்துத்துக்கொண்டே சொல்லி இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.