தமிழ் ரீமேக் நண்பன்… இதுவரை நீங்க கேட்டிராத சூப்பர் தகவல்… அட இத மிஸ் பண்ணிராதீங்க!

Nanban: தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக வெளிவந்த திரைப்படம் நண்பன். ரசிகர்கள் இதுவரை அறிந்திராத சூப்பர் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ராஜ்குமார் ஹீரானி இயக்கத்தில் இந்தியில் ரிலீஸாகி ஹிட்டடித்த திரைப்படம் 3 இடியட்ஸ். இப்படத்தினை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஷங்கர் மற்றும் விஜய் கூட்டணியில் முதல் மற்றும் கடைசி ரீமேக் இதுதான். முதலில் இப்படத்தில் விஜய் நடிக்க இருந்தார்.
ஆனால் வேலாயுதம் படத்தின் ஷூட்டிங் லேட்டானதால் விஜய் விலகுவதாக முடிவெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த கேரக்டருக்கு நடிகர் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் மீண்டும் நடிகர் விஜயே படத்திற்குள் வந்தார்.
தமிழில் விஜயையும், தெலுங்கில் மகேஷ்பாபுவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பின்னால் தெலுங்கில் அந்த படம் இயக்கப்படவில்லை. அதுபோல, மோகன்ராஜா இப்படத்தினை இயக்குவதாகவும் இருந்தார்.
ஆனால் வேலாயுதம் படத்தின் ஷூட்டிங் தாமதமானதால் அந்த ரேஸில் முந்தினார் ஷங்கர். அதுமட்டுமல்லாமல் இந்த ரேஸில் பார்த்திபனும் முன்னிலையில் இருந்தார். ஆனால் அவரும் சில பல காரணங்களால் அவருக்கு அந்த வாய்ப்பு நழுவி போனது.
ஸ்ரீகாந்த நடித்த வேடத்தில் முதலில் ஆர்யா மற்றும் ரவியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம். அதையடுத்து ஜீவாவிடம் பேச அவரோ தனக்கு செந்தில் வேடம் மட்டுமே வேண்டும் என அடம் பிடித்து வாங்கிவிட்டாராம் ஜீவா.
இப்படத்தில் மதன் கார்க்கி எழுதிய அஸ்க்கு லஸ்கா பாடலில் காதல் எனும் வார்த்தைக்கு பல மொழிகள் உள்ள வரிகளை பயன்படுத்தினாராம். சிவாஜி படத்தில் நடிக்க முடியாமல் போன சத்யராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.
சத்யன் நடித்த ஸ்ரீவத்சன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் மலையாள ஹீரோ திலீப். அதுமட்டுமல்லாமல் நடிகை இலியானா நடிப்பில் வந்த கடைசி தமிழ் திரைப்படமும் இதுதான். வசூல் ரீதியாக இப்படம் 85 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.