இறந்தவன் போட்டோவ எடுத்துட்டு பனையூருக்கு வாங்க! வீடியோ காலில் விஜய் பேசியது என்ன?

கரூர் சம்பவம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் 27 ஆம் தேதி விஜய் தேர்தல் பரப்புரைக்காக கரூர் சென்றிருந்தார். அப்போது விஜயை பார்க்க அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு முக்கியகாரணமாக பார்க்கப்படுவது விஜய் பரப்புரைக்கு தாமதமாக வந்ததுதான் என அவருக்கெதிராக குரல் எழுப்பி வந்தனர்.
மேலும் பல பேர் விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே மயக்கமடைந்ததாகவும் அதை விஜய் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறி வந்தனர். ஆனால் சில வீடியோக்களில் பார்க்கும் போது விஜய் தன்னுடைய வாகனத்தில் இருந்தே தண்ணீர் பாட்டிலை வீசி தேவையானவர்களுக்கு கொடுத்துதான் வந்தார். சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்னவாக இருக்க முடியும் என்பதை ஆராய விசாரணைகள் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டன.
ஜனாதிபதியில் இருந்து மாநில அரசுகள் வரை நிவாரண நிதிகளை அறிவித்தனர். தற்போது சம்பவத்தை சிபிஐ விசாரணை வழங்கலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தவெக-வினருக்கு நிம்மதி பெருமூச்சாகியிருக்கிறது. விஜயை பொறுத்தவரைக்கும் ஐந்து மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். கரூரில் மட்டும் இந்த மாதிரி நடப்பதற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பினார்.
கூடிய சீக்கிரம் கரூருக்கு நேரில் விஜய் வர வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன் பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் உறவினர்களை இழந்த குடும்பத்தை வீடியோ காலில் தொடர்பு கொண்டு விஜய் பேசியிருக்கிறார். வீடியோ காலில் பேசும் போது யாரும் புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும் விஜய் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தன் ஒரே மகனை இழந்த ஒரு பெற்றோர் விஜய் வீடியோ காலில் என்ன பேசினார் என்று கூறியிருக்கிறார்.
அதாவது தவெக கட்சி சார்பாக இரண்டு முறை தங்களை வந்து சந்தித்து விட்டு போனதாகவும் விஜய் வீடியோ காலில் பேசியதாகவும் அந்த சிறுவனின் தாய் கூறியிருக்கிறார். விஜய் ரொம்ப வருத்தப்பட்டதாகவும் நடக்க கூடாதது நடந்துவிட்டது, என்னால் வெளியே வரமுடியவில்லை என்றும் விஜய் கூறியிருக்கிறார். அதற்கு அந்த சிறுவனின் தாய் ‘சார் கரூருக்கு வாங்க. வந்து என் மகன் புகைப்படம் அருகில் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்.’
‘அவன் உங்களை அந்த கூட்டத்தில் பார்த்தானா இல்லையானு தெரியல. அதனால் இங்க வாங்க’ என்று கூறியிருக்கிறார். அதற்கு விஜய் ‘சரிம்மா.. நான் வர்றதுக்கு முயற்சி பண்றேன் .இல்லாவிட்டால் நான் சொல்ற இடத்துக்கு தம்பியோட புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வாங்க. புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறினாராம். 10 நிமிடம் வீடியோ காலில் பேசியிருக்கிறார் விஜய்.
அவருக்கு என்ன பேசுறது? எப்படி ஆறுதல் சொல்றதுனு தெரியல. நேரில் சந்திக்கும் போது பேசலாம் என மேலும் விஜய் சொல்லியிருக்கிறார். எங்களுக்கு ஒரே மகன். அவன் இருக்கும் போது விஜய் வீடியோ காலில் பேசியிருந்தால் அவன் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பான் என அந்த பெற்றோர் கூறினார்கள்.