அண்ணன் வறார் வழி விடு!.. விஜயின் பிரச்சார வேனின் விலை மட்டும் இவ்வளவு லட்சமா?!....

Vijay Tvk: சினிமா கெரியரில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் நுழைந்துவிட்டார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியல் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கோட் படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே, இப்போது ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என அவர் அறிவித்திருந்தார்.
விக்கிரவாண்டியில் கட்சி மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி காட்டினார். இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு கூடிய கூட்டத்தை பார்த்துவிட்டு கண்டிப்பாக வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயின் கட்சி குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை பெறும் என்றே பலரும் நினைத்தனர்.
மாநாட்டில் முழுக்க முழுக்க திமுகவை விமர்சித்து மட்டுமே பேசினார். உங்களின் ஊழல் ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். பயந்து திரும்பி செல்ல மாட்டேன் எனவும் கூறினார். அந்த மாநாட்டில் விஜய் பேசியது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.

இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனரஞ்சகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவடையும் என ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால், மே மாதம் வரை படப்பிடிப்பு நடக்கவுள்ளது. ஏனெனில், சில காட்சிகள், 3 பாடல்கள் மற்றும் ஒரு சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டிருக்கிறது படக்குழு.
இதையெல்லாம் முடித்து கொடுத்துவிட்டு ஜூன் மாதம் முதல் முழு நேர அரசியலில் ஈடுபடவிருக்கிறார் விஜய். 2026 கோடை விடுமுறையில் தேர்தல் வரும் என்பதால் இந்த ஒரு வருடம் முழுக்க அரசியல் வேலைகளை விஜய் தீவிரப்படுத்தவிருக்கிறாராம். குறிப்பாக தமிழகத்தின் அனைத்து ஊர்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
விஜய் பிரச்சாரம் செய்வதற்காக Urbania வேன் ஒன்றையும் புதிதாக வாங்க திட்மிட்டுள்ளனர். இந்த வேனின் விலை சுமார் 35 லட்சம் என சொல்லப்படுகிறது. எனவே, ஜூன் மாதத்திற்கு பிறகு முழுநேர அரசியல்வாதியாக விஜயை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள்.