'சோறு சாப்பிட்டா தான் பசியாறும்... சொல்றதால அல்ல...' ரஜினி, போஸ்வெங்கட்டுக்கு விஜய் சூசக பதில்

by sankaran |   ( Updated:2024-10-28 02:11:27  )
rajni, vijay
X

அரசியலுக்கு ரஜினி வருவேன் வருவேன்னு சொல்லி பூச்சாண்டிக் காட்டுனாரு. கடைசியில வரலன்னு சொல்லிட்டாரு. அதனால ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளானார். அப்புறமா தன்னோட உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஒதுங்கி விட்டதாக அறிக்கைக் கொடுத்தார்.

அப்புறம் சமாதானமானாங்க. அதே போல நடிகர் போஸ்வெங்கட் கங்குவா படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில சூர்யா தான் ரசிகர்களுக்கு படிப்புல இருந்து எல்லாம் படிப்படியாக் கத்துக் கொடுக்காரு.

அவரு தான் அரசியலுக்குப் பொருத்தமானவர். வரணும் என்றெல்லாம் பேசி விஜயை மறைமுகமாக சாடினார். அதற்கும் விஜய் இந்த மாநாட்டில் சூசகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். என்னென்ன சொன்னாருன்னு பார்க்கலாமா...

அரசியல் நமக்கு ஒத்து வருமான்னு பூதக்கண்ணாடியை வச்சி யோசிச்சா சரிவராது. ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பது தான் நமது கோட்பாடு. பிளவு வாத கட்சிகளைக் கூட ஈசியா கண்டுபிடிச்சிடலாம். ஆனால் இந்த ஊழல் இருக்கே அது எங்கே ஒழிஞ்சிருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியாது.


அந்தக் கரெப்ஷன் கபடதாரிகள் தான் இப்போ ஆண்டுக்கிட்டு இருக்காங்க. மகத்தான அரசியல்னா அது மக்களுக்கான அரசியல் தான். சோறு சாப்பிட்டா தான் பசியாறும். சொல்றதால பசியாறாது. 'மீன்பிடிக்கக் கத்துக்கொடுக்கணும்'னு சொல்வாங்க. ஆனா எங்க ரூட்டே வேற. முடிஞ்சவங்க மீன் பிடிச்சி சாப்பிடட்டும். முடியாதவங்களுக்கு நாம மீன் பிடிச்சி கொடுத்து வாழ வைப்போம்.

உங்கள்ல ஒருவனா இருந்து நான் உழைக்கணும். எல்லாத்தையும் யோசிச்சித் தான் ஒவ்வொரு அடியா எடுத்து வைப்பேன். ஒரு முடிவோடு தான் வந்துருக்கேன். மாபெரும் சக்தியோடு சேர்ந்து எடுத்த முடிவு. இது கொள்ளை அடிக்க வந்த கூட்டம் இல்ல. பக்கா பிளானோடு வந்த கூட்டம்.

சோசியல் மீடியாவுல கம்பு சுத்த வந்த கூட்டம் அல்ல. சொசைட்டிக்காக வாளேந்த வந்த கூட்டம். மீடியா ட்ரோல், ஆபாசம், அல்லு சில்லு, பயாஸ்கோப் காட்றது இதெல்லாம் வச்சி இந்தப்படையை வீழ்த்தலாம்னு கனவு கண்டுறாதீங்க.

இவங்க மட்டும் தான் நம்ம கூட்டம்னு நினைச்சிடாதீங்க. இன்னும் நல்லாட்சிக்காக ஏக்கத்தோடு வர முடியாதவங்க நிறைய பேர் இருக்காங்க. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story