ஆக மொத்தம் பொண்டாட்டி கூட எவனும் வாழல… நாஞ்சில் விஜயன் ஏமாற்றியதாக திருநங்கை பரபரப்பு புகார்
விஜய் டிவியில் உள்ள காமெடி நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்றவர் நாஞ்சில் விஜயன். இவர் மீது தற்போது திருநங்கை ஒருவர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தி ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. இதைப் பற்றி அவர் கூறுகையில் ,”விஜய் டிவி புகழ் காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் கடந்த ஏழு வருடங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தார். ஆனால் தற்போது இனிமேல் என்னுடன் தொடர்பில் இருக்க முடியாது என்று என்னை மனதளவில் புண்படுத்தி விட்டார்”.
”எனக்கு நீதி கிடைக்குமா? என்பதில் எனக்கு பதற்றமாக இருக்கிறது. என்னுடைய வழக்கறிஞரிடம் இதைப் பற்றி பேசும்போது கண்டிப்பாக உங்களுக்கு நீதி கிடைக்கும் என்று கூறினார். முதலில் நான் ஜாய் கிரசண்டாவுக்கு நன்றி சொல்கிறேன். ஏனென்றால் இந்த மாதிரி நான் ஒரு முடிவு எடுத்ததற்கு காரணம் அவங்க தான். மாதம்பட்டி மாதிரி ஒரு பிக் ஷார்ட் என்பதால் அவர் மீது எந்த ஆக்ஷனும் எடுக்கவில்லை. இருந்தாலும் அவர் போராடிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து தான் நான் வெளியில் வந்து இதை சொல்கிறேன்”.
”கண்டிப்பாக மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்காக மாத்திரைகள் எடுத்து வருகிறேன். கடந்த ஐந்து வருடமாக நான் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறேன். நான் ஒரு பெண் இல்லை என்பதால் என்னால் கர்ப்பமாக முடியாது. நான் ஒரு திருநங்கை என்பதால் எனக்கு நிரூபிக்க வழி தெரியவில்லை. என்னுடன் பழகிய நாட்களில் எனக்கு ஆசை வார்த்தை காட்டி உன்னை பார்த்துக்கிறேன், உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொன்னதனால் அவருடன் உறவில் இருந்தேன்”.
’ஆனால் இன்று என்னை வேண்டாம் என்று வெறுத்து ஓடுகிறார். இது ரொம்ப எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அவருக்கு கல்யாணம் ஆகும் முன்பிருந்தும் அதன் பிறகும் அவர் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுதும் என்னுடன் தொடர்பில் தான் இருந்தார். குழந்தை பிறந்தவுடன் என்னை வெறுக்க ஆரம்பித்து விட்டார். கஷ்டம் என்று என்னிடம் சில லட்சங்கள் பணம் வாங்கியுள்ளார். அது மட்டும் இல்லை என்னுடைய நகையை அடமானம் வைத்து அந்த பணத்தையும் எடுத்துள்ளார்”.
”இப்பவும் என்னுடைய மூன்று லட்ச ரூபாய் பணம் அவரிடம் தான் இருக்கிறது. எங்களுடைய உறவு அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். எனக்கு வேறு எதுவும் வேண்டாம் அவர் மீண்டும் என்னுடன் வந்து வாழ்ந்தால் போதும். நான் அவரை கைது செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்கிறேன். ஒருவேளை எனக்கு கடைசி வரை நீதி கிடைக்கவில்லை என்றால் கண்டிப்பாக அவரை கைது செய்ய போராடுவேன்”. என்று கூறியுள்ளார்.
