மக்கள் செல்வன் படத்தில் வாய்ப்பு கிடைத்த விஜய் டிவி நடிகை!... செம லக்கிங்க நீங்க!

by Akhilan |
vijay sethupathi
X

Vijay TV: பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் நடித்து வரும் பிரபலங்களுக்கு சினிமா வாய்ப்புகள் குவியத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தில் பிரபல விஜய் டிவி நாயகி ஒருவர் ஒப்பந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பொதுவாக சின்னத்திரை என்றால் சன் டிவி மட்டுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது. அந்த இடத்தை தட்டி தூக்கம் வந்ததுதான் விஜய் டிவி. வித்தியாசமான சீரியல்களை இயக்கி ரசிகர்களை தன்வசம் சாய்த்தது.

அப்படி ஒரு சீரியலாக உருவானது தான் பாரதிகண்ணம்மா. முதலில் சாதாரண சீரியலாக இருந்த பாரதி கண்ணம்மா ஒரு கட்டத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதற்கு காரணம் ஹீரோயின் கண்ணம்மா ஒரு பையை தூக்கிக்கொண்டு கர்ப்பிணியாக ரோட்டில் நடந்து கொண்டிருப்பார்.

கிட்டத்தட்ட பல வாரம் அதேபோன்ற எபிசோடு ஒளிபரப்பாக இருக்கும் பலரும் அந்த சீரியலை பற்றி பேசிக்கொண்டே இருந்தனர். இதனால் அந்த கேரக்டரில் நடித்த ரோஷினி ஹரிப்ரியனுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் குவிந்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து சில வாரங்களில் ரோஷினி சீரியலில் இருந்து விலகினார்.

அடுத்த சில வாரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் விஜய் டிவிக்குள் வந்தார். ஆனால் அதுவும் அவரின் கேரியருக்கு மிகப்பெரிய ஏற்றமாக தான் அமைந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் புதிய தொடங்கியது.

அந்த வகையில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடித்த கருடன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ரோஷினி நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிக்கும் திரைப்படத்தில் முக்கிய இடத்தில் ரோஷினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story