Vijay: சினிமாவில் விஜய் இப்படிதான் இருப்பார்… மற்ற ஹீரோக்கள் இதை கத்துக்கணும்… சீக்ரெட் சொன்ன ஹிட் தயாரிப்பாளர்!

Vijay: விஜய் நடிப்பில் ஒவ்வொரு படமும் உருவாகும் போது அவர் ஃபாலோ செய்யும் முக்கிய விஷயத்தினை பிரபல தயாரிப்பாளார் தெரிவித்து இருக்கும் தகவல் வைரலாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக ஹிட்டடித்தவர் விஜய். ஆரம்பத்தில் விஜயும் தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் அறிமுகமானார். ஆனால், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தும் தொடர்ந்து நடித்து வந்தார்.
பின்னர் பாசில் இயக்கத்தில் காதலுக்கு மரியாதை உள்ளிட்ட சில படங்கள் விஜயின் கேரியரை உயர்த்தியது. அதிலிருந்து தந்தையின் இயக்கத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்தார்.
தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்தவர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே கோலிவுட்டின் வருமானத்தில் 30ல் இருந்து 35 சதவீதமாக அமைந்துள்ளது.

இதனாலே விஜயின் கடைசி சில படங்களுக்கு ஒவ்வொரு முறையும் அவருக்கு 50 கோடி வரை சம்பளம் உயர்த்தப்பட்டு வந்து தற்போது அவரின் சம்பளம் 275 கோடி வரை ஜனநாயகன் படத்துக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படம் விஜயின் கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் ஒரு படத்துக்கு கால்ஷூட் கொடுக்கும் போது ஆறு மாதம் கணக்கில் கொடுப்பாராம். அதாவது ஒரு மாதத்திற்கு 20 நாட்கள், மீதி 10 நாட்கள் தன்னுடைய விடுமுறைக்காக எடுத்து கொள்வாராம். இதுகுறித்து பேசிய தில் ராஜூ விஜயின் இந்த முறையை மற்ற நடிகர்களும் பயன்படுத்த வேண்டும்.
இப்படி எல்லா இயக்குனர்களும் கால்ஷீட் கொடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு எந்த பிரச்னையும் வராது. ஆனால் இது தெலுங்கு சினிமாவில் மோசமாகி இருக்கிறது. கால்ஷீட்டை சரியாக கொடுக்காமல் பிரச்னை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.