விஜயகாந்தும் விஜயும் இவ்ளோ குளோசா!.. வைரலாகும் புகைப்படம்!. ஆனா ஒரு டிவிஸ்ட்டு!..

by Murugan |
vijay vijayakanth
X

விஜய் vijayakanth

Vijayakanth vijay: விஜய்க்கு சரியான வெற்றி கிடைக்காமல் இருந்த நேரத்தில் அவரை அப்போது பெரிய நடிகராக இருந்த நடிகர்களோடு சேர்ந்து நடிக்க வைத்தால் விஜயும் ரசிகர்களிடம் பிரபலமாகிவிடுவார் என கணக்கு போட்ட விஜயின் அப்பா எஸ்.ஏ.சி. சத்தியராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பல சீனியர்கள் நடிகர்களிடம் போய் கேட்டார்.

விஜய்க்கு வாய்ப்பு கேட்ட எஸ்.ஏ.சி:

எல்லோரும் ‘பார்க்கலாம்’ என்றே சம்பிரதாயமாக சொன்னார்கள். பலரிடமும் கேட்டு ஓய்ந்து போன அவருக்கு விஜயகாந்திடம் கேட்கலாம் என தோன்ற அவருக்கு போன் செய்தார். ‘நான் உன்னிடம் பேச வேண்டும். எப்போது உன்னை வந்து பார்க்க?’ என அவர் கேட்க ‘நானே உங்களை பார்க்க வருகிறேன்’ என சொல்லி உடனே அவரின் வீட்டுக்குப் போனார் விஜயகாந்த்.


எஸ்.ஏ.சி தனது ஆசையை சொல்ல உடனே அதற்கு சம்மதம் சொன்னார் விஜயகாந்த். அப்படி உருவான திரைப்படம்தான் செந்தூரப்பாண்டி. விஜயகாந்த் படம் என்பதால் பி,சி செண்டரிலும் பிரபலமானார் விஜய். அதன்பின் விஜய் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். செந்தூரபாண்டி படத்தில் நடித்ததற்காக விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லை.

செந்தூரப்பாண்டி:

செந்தூரபாண்டி படத்திற்கு பின் விஜயும், விஜயகாந்தும் இணைந்து நடிக்கவில்லை. விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும் அவரை சென்று விஜய் பார்க்கவில்லை. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. விஜயகாந்த் இறந்தபோது அன்று இரவே அவரின் உடலை பார்த்து அஞ்சலி செலுத்தினார் விஜய்.

அப்போது சில விஜய் ரசிகர்கள் அவர் மீது செருப்பு வீசிய சம்பவமும் நடந்தது. ஒருபக்கம், விஜயை தன்னுடனு நடிக்க வைத்து அவரை விஜயகாந்த் தூக்கிவிட்டது போல விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனை தனது படத்தில் விஜய் நடிக்க வைக்க வேண்டும் எனவும் பொதுவான ரசிகர்கள் சொன்னார்கள். ஆனால், விஜய் அதை செய்யவில்லை.

விஜயகாந்த் ரசிகர்களின் கோபம்:

விஜயகாந்த் விஷயத்தில் ரசிகர்கள் தன் மீது கோபமாக இருப்பதை புரிந்துகொண்ட விஜய் கோட் படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்தை கொண்டு வந்து அவர்களின் கோபத்தை குறைத்தார். அது கூட அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவின் யோசனைதான். இந்நிலையில், விஜயகாந்தும், விஜயும் கன்னத்தோடு கன்னம் ஒட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.


ஆனால், இது உண்மையில்லை. ஏஐ தொழில்நுட்பம் மூலம் இப்படி உருவாக்கி சிலர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். ஏஐ என்றாலும் பார்ப்பதற்கு உண்மை போலவே இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது கடந்த சில நாட்களாகவே 2 பிரபங்களை ஏஐ மூலம் இப்படி உருவாக்கி புகைப்படத்தை உருவாக்கி வெளியிடுவது அதிகரித்து வருகிறது.

Next Story