குழந்தை பெற்றுக்கொள்ளாம இருக்க இதுதான் காரணம்... விஜயசாந்தி சொன்ன சீக்ரெட்!
தமிழ்த்திரை உலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஆனால் அப்போது தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் விஜயசாந்தி.
கல்லுக்குள் ஈரம் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இவர் வைஜெயந்தி ஐபிஎஸ். படத்தில் மாஸாக நடித்துத் தூள் கிளப்பினார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து போலீஸ் கேரக்டர்களாக நடித்து வந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த மன்னன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
ஆணவம் பிடித்த கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்தப் படத்தின் இயக்குனர் பி.வாசு. படப்பிடிப்பின்போது தான் லேடி சூப்பர்ஸ்டார் என்பதால் தலைக்கனத்தோடு இருந்தாராம்.
இதனால் இயக்குனர் அவரிடம் இங்கு ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான். அது ரஜினி மட்டும்தான்னு சொன்னாராம். அப்புறம்தான் அடங்கினாராம். அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1988ல் எம்.வி.ஸ்ரீனிவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் விஜயசாந்தி ஒரு ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க. திருமணமாகி பல வருடங்களாக எங்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒருவேளை இருந்தால் அதை வைத்து தெலுங்கானாவில் பிளாக்மெயில் செய்வார்கள். அதனால் நாங்கள் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம்.
குழந்தை பெற்றுக் கொள்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான விஷயம். குழந்தைப் பெற வேண்டும் என்று இருந்தபோது அரசியலில் பிளாக்மெயில் பண்ணும் மோசமான சூழ்நிலை இருந்தது. இதுபற்றி என் கணவரிடம் சொன்னேன். அவரும் அதைப்புரிந்து கொண்டு என் கருத்தை ஒத்துக்கொண்டார். அதனால் தான் குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விஜயசாந்தி 5 முறை தெலுங்கானாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார். ஒருமுறை தேசிய விருதைப் பெற்றுள்ளார். ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை 4 முறை பெற்றுள்ளார். தொடர்ந்து தென்னிந்தியாவின் வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். இவர் 3 படங்களைத் தயாரித்தும் உள்ளார். பிஜேபியில் இருந்த இவர் தற்போது இந்திய தேசிய காங்கிரஸில் உள்ளார். இவர் சமீபத்தில் கோடி கோடியா சம்பாதிச்சும் நிம்மதியா தூங்க முடியலன்னு பேசியிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.