விஜய் முந்துகிறாரா அஜித்?.. எல்லாத்துக்கும் காரணம் அரசியல் தானா?.. என்னப்பா சொல்றீங்க!..

by Ramya |
ajith-vijay
X

Actor Ajith: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்த கையோடு துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்து கொள்வதற்கு சென்றிருந்த அஜித் மூன்றாவது பரிசை வென்றிருக்கின்றார்.

அடுத்ததாக ஐரோப்பியாவில் நடக்கும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது. அடுத்த 9 மாதத்திற்கு சினிமாவில் இவர் தலைகாட்டவில்லை என்று அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார். அடுத்து 9 மாதம் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களை நடித்து முடித்து கொடுத்துவிட்டு தான் சென்று இருக்கின்றார்.


அந்த வகையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளிவந்துள்ளது. இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காப்பிரைட்ஸ் பிரச்சினை காரணமாக படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிடவில்லை.

இதனை தொடர்ந்து அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. இதற்கு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் குட் பேக் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இப்படி இரண்டு திரைப்படங்கள் இந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியாக இருப்பது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. விடாமுயற்சி திரைப்படத்தை காட்டிலும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கின்றது.

அதிலும் அந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் லுக் ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கின்றது. மேலும் ஓடிடி மற்றும் சாட்டிலைட் விற்பனையில் அஜித்தின் மற்ற படங்களை காட்டிலும் குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல விலைக்கு விற்பனையாகி இருக்கின்றது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் இந்த அளவுக்கு பிசினஸ் ஆகவில்லை.

தற்போது வரை சினிமாவில் அஜித், விஜய் என்கின்ற போட்டி இருந்தாலும் படத்தின் வியாபாரம், விற்பனை என்று வரும்போது அஜித் படத்தை காட்டிலும் விஜய் திரைப்படத்திற்கு அதிகம் மவுசு இருக்கும். அதாவது அஜித் படத்தை விட விஜயின் திரைப்படம் அதிக அளவுக்கு விற்பனையாகும். தற்போது விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதால் நடிகர் அஜித் மீதும் அவரின் திரைப்படங்களின் மீதும் அதிக கவனம் எழுந்துள்ளது.


தற்போது அஜித் திரைப்படங்களுக்கு வியாபாரம் அதிக அளவு உயர்ந்து இருக்கின்றது. அதாவது குட் பேட் அக்லி திரைப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என மூன்று மாநிலங்களின் வெளியீட்டு உரிமையையும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் வாங்கி இருக்கின்றார். கிட்டத்தட்ட இந்த திரைப்படத்தை கடந்த அக்டோபர் மாசமே அட்வான்ஸ் கொடுத்து முன்பதிவு செய்து இருந்த நிலையில் தற்போது 72 கோடி கொடுத்து இதன் வெளியீட்டு உரிமையை வாங்கி விட்டார்களாம். இந்த செய்தி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Next Story