இந்த அணுகுமுறை சரியா? விமர்சனத்தையும் தாண்டி ஆட்டம் காண வரும் விஜய்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் தவெக கட்சியினர் பெருமூச்சு விட்டிருக்கின்றனர். கரூர் விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவு விஜய்க்கும் சரி ஒட்டுமொத்த தவெக கட்சிக்கும் சரி. நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர். இந்த உத்தரவிற்கு பிறகு விஜய் சார்பில் அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் நீதி வெல்லும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பதிவிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் விஜய்.
இதை பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது ‘ நீதி வெல்லும்’ என்ற ஒரே ஒரு வார்த்தைதான். வேறு எதுவும் கிடையாது. விஜயின் இந்த அணுகுமுறை மிகவும் பிரம்மாதமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த அணுகுமுறை மீது நிறைய பேர் விமர்சனங்களை வைத்தார்கள். குறைவாக பேசுகிறார். எழுதி வைத்து பேசுகிறார். அவர்களே இவர்களே என வழிமுறையோடு பேசுகிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பிறகு நீதி வெல்லும் என விஜய் பதிவிட்டது ஒரு பக்கம் இருந்தாலும் இதே இடத்தில் விஜயை தவிற வேறு ஒரு அரசியல் தலைவர் இருந்திருந்தால் இந்நேரம் அந்த ஒரு வார்த்தைக்கு பதிலாக மைக்கை பிடித்துக் கொண்டு மவனே. நீ யாரு? இப்ப நான் யாருனு தெரியுதா என ஒரு வழி பண்ணிருப்பார்கள். பிரஸ் மீட், பொதுக்கூட்டம், 10 பக்க அளவு அறிக்கை என வெடித்திருப்பார்கள்.
ஆனால் விஜயோ அல்லது தவெக தொண்டர்களோ அப்படி எதுவுமே ரியாக்ட் பண்ணவில்லை. ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் யாராவது முன் வந்து ‘அடப்பாவி! நீ ஏன் கரூருக்கு வந்த? அப்படியே நாமக்கல் வழியாகவே போயிருக்கலாமே. வராமல் இருந்திருந்தால் இப்படி ஒரு விபத்து நடந்திருக்குமா? எல்லாத்துக்கும் காரணமே நீதான்’ என விஜயை பார்த்து யாராவது எந்த சேனலிலாவது சொன்னாங்களா? அதுதான் விஜயின் பலமே.
நம்ம கேள்விப்பட்டவரைக்கும் என்னவெனில் மக்கள் விஜய் மீது வைத்திருந்த நம்பிக்கையை பார்த்துதான் அன்று அழுது கொண்டே இரவு கிளம்பியிருக்கிறார். அதனால் இதிலிருந்து பின்வாங்க கூடாது. அந்த மக்கள் என்னை இவ்வளவு நம்பியிருக்கிறார்கள். ஒருத்தர் கூட என்னை திட்டவே இல்லை. அந்த 41 குடும்பத்திற்கும் இனிமே அண்ணனாக, தம்பியாக, மகனாக நான் இருப்பேன் என விஜய் கூறியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஆதரவை தாண்டி முக்கியமாக பல எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன. இதற்கிடையில் பவன்கல்யாண் விஜய்க்கு ஒரு நல்ல யோசனையை சொல்லியிருப்பார். எங்க அண்ணன் சிரஞ்சீவி இப்படித்தான் கட்சியை ஆரம்பித்தார். உங்களுக்கு இணையாக ஒரு கூட்டம் வந்தது. திருப்பதி முழுக்க நிரம்பி விட்டது. அவரும் விடாப்பிடியாக இருந்தாரு. தனித்துதான் நிற்பேன். கூட்டணி வைக்கமாட்டேனு இருந்தார்.
ஆனால் மக்கள் வேறு மாதிரி நினைத்துவிட்டார்கள். அப்படியே அந்த கட்சியை காங்கிரஸில் போய் இணைத்தார். நீங்க அந்த தவறை செய்யாதீங்க. நானும் அப்படித்தான் இருந்தேன். கூட்டணி வைத்த பிறகு எனக்கும் விமர்சனம் வந்தது. ஆனால் மக்களின் நம்பிக்கைய பெற்றேன். ஜெயித்தேன். அதை போல் கூட்டணிதான் ஒரே வழி விஜய் உங்களுக்கும் என கூறினார்..
இன்று அரசியலையும் தாண்டி அதில் ராஜ தந்திரமும் இருக்க வேண்டும். இங்க அறிவாளிக்கு வேலை இல்லை. புத்திசாலிக்குத்தான் வேலை. பாஜகவின் கைக்கூலியாக தவெக மாறப் போகிறது. தவெக கட்சியை பாஜக மொத்தமாக தத்தெடுக்க போகிறது என்ற விமர்சனங்களை எல்லாம் தாண்டி விஜய் மக்களுக்கான அரசியலை கண்டிப்பாக செய்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.