இந்த பிரச்சினை வேற இருக்கா? ஜேசன் சஞ்சய் படம் தாமதமானதுக்கு இதுதான் காரணமா?
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தின் அப்டேட் எப்பொழுது வரும் என அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்பா ஒரு பக்கம் இந்த சினிமாவில் 30 வருடத்திற்கும் மேலாக பல வெற்றிகளை கொடுத்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். அவருடைய மகன் எனும் போது அதற்கேற்ற வகையில் ஒரு அழுத்தம் ஜேசன் சஞ்சய்க்கு இருக்கத்தான் செய்யும்.
அப்பாவின் சாதனையில் பாதியளவாவது அடைய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவார் ஜேசன் சஞ்சய். சினிமா சம்பந்தப்பட்ட படிப்புகளை வெளி நாட்டில் படித்து முடித்துவிட்டு இந்தியா திரும்பி ஜேசன் சஞ்சய் ஒரு குறும்படத்தையும் இயக்கியிருக்கிறார். இப்போது லைக்காவின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவும் இருக்கிறார்.
இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் படக்குழு படப்பிடிப்புக்கு சென்றதாக தெரியவில்லை. யார் ஹீரோ ஹீரோயின் என அறிவிக்கப்படவும் இல்லை. சமீபத்தில்தான் இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கூடிய சீக்கிரம் படப்பிடிப்பையும் ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்தளவுக்கு படம் தாமதமானதற்கான காரணத்தை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஜேசன் சஞ்சயை பொருத்தவரைக்கும் அவருக்கு தமிழ் எழுதவே தெரியாதாம். ஆங்கிலத்தில்தான் ஸ்கிரிப்டை கொடுத்திருக்கிறார். அதனால் தமிழில் எழுத உதவியாளரை வைத்திருக்கிறாராம். முதலில் ஆங்கிலத்தில் எழுதி அதன் பின் அதை மொழி பெயர்ப்பு செய்து கடைசியாகதான் முழு பவுண்டட் ஸ்கிரிப்டாக வருகிறதாம்.
இதுதான் இந்தப் படம் இவ்வளவு காலம் தாமதமானதற்கு ஒரு வகையில் காரணமாகக் கூட இருக்கலாம் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார். ஆனால் ஜேசன் சஞ்சயிடமிருந்து ஒரு நல்ல கதையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் லைக்கா நிறுவனம் என்றும் அந்தணன் கூறினார்.