அப்படி மட்டும் நடிக்காத.. நடிகருக்கு அட்வைஸ் செஞ்ச விஜய்சேதுபதி! கடைசில அவரே வச்ச ஆப்பு

sethu
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர். தற்போது அவருடைய நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த படம் ஜூலை 25ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் தலைப்பு அழகான தூய தமிழில் இருப்பதோடு மட்டுமல்லாமல் படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்களையும் தமிழில் தான் வைத்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் ஆகாச வீரன் என்றும் அவருக்கு ஜோடியாக நடித்த நித்யா மேனனுக்கு பேரரசி என்றும் கேரக்டர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் விஜய் சேதுபதி அடுத்து அவருடைய மகனையும் இப்போது களத்தில் இறக்கி இருக்கிறார். அவருடைய மகன் நடிப்பில் பீனிக்ஸ் என்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதியை பற்றி பிரபல நடிகர் டேவிட் சாலமன் ராஜா ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.
இவர் பல சீரியல்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் .அதில் மிகவும் பிரபலமானார் .அந்த ஒரு பிரபலத்தால் வெள்ளி திரையிலும் நடிக்க வந்தார் டேவிட். பெரும்பாலான படங்களில் இவரை போலீசாகத்தான் நாம் பார்த்திருப்போம் .முதலில் விஜய் சேதுபதி சங்கு தலைவன் என்ற படத்தில் நடிக்க இருந்தாராம் .அந்தப் படத்தில் இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் படம் அப்படியே டிராப் ஆகிவிட்டதாம்.
அதன் பிறகு கிருமி என்ற படத்தில் டேவிட் நடித்திருக்கிறார். அதனை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் நடிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிருமி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டேவிட். அதை அறிந்த விஜய் சேதுபதி ‘போலீஸ் கேரக்டர் கொடுத்தால் இனிமேல் நடிக்காத, அப்புறம் கடைசி வரைக்கும் போலீசாகவே தான் நடிப்பாய்’ என ஒரு நல்ல அட்வைஸை கொடுத்தாராம்.

அதன் பிறகு தான் ஆரஞ்சு மிட்டாய் படத்தில் விஜய் சேதுபதி அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் .ஆனால் அந்தப் படத்தில் ஒரு ஜெயிலர் கதாபாத்திரம். அதில் யாரை நடிக்க வைக்கலாம் என தேடிக்கொண்டிருக்க விஜய் சேதுபதி தான் டேவிட் பெயரை கூறியிருக்கிறார். உடனே டேவிட் ‘அவர்தான் என்னை போலீஸ் கேரக்டரில் நடிக்க வேண்டாம் என சொன்னார். திரும்பவும் ஏன் போலீஸ் கதாபாத்திரத்திற்கு என்னை அழைத்தார் ’ என அந்த படத்தின் இயக்குனரிடம் கேட்டாராம். அதற்கு அந்த இயக்குனர் நீ போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை போலீசாகவே இருக்கிறாய். அதனால் தான் அவர் உன்னை ரெகமெண்ட் செய்திருக்கிறார் என அந்த இயக்குனர் கூறினாராம்.