விஜய்சேதுபதி சொன்னது நூற்றுக்கு நூறு கரெக்ட்... அப்போ சமுத்திரக்கனி சொன்னது...?

by Sankaran |   ( Updated:2024-12-31 16:31:27  )
vijaysethupathi, samuthirakani
X

பிக்பாஸ் சீசன் 8 இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டு உள்ளது. இந்த நிலையில் போட்டியாளர்களும் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் போராடிக் கொண்டு இருப்பார்கள். பிக்பாஸ் சீசனை நடத்தி வரும் விஜய் சேதுபதிக்கு அவ்வப்போது விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் இப்போது ஒரு கருத்தைத் தெரிவித்து இருப்பது உண்மையிலேயே நூற்றுக்கு நூறு சரிதாம்பா என்று சொல்லத் தோன்றுகிறது. வாங்க அவர் சொன்னது என்னன்னு பார்க்கலாம்.

என்ன தான் காசு பணம் சம்பாதிச்சி எவ்ளோ தூரம் ஓடுனாலும் நாம திரும்பி வரதுக்கு ஒரு கூடு இருக்கு. நம்மள நேசிக்க வீட்ல ஆளுங்க இருக்காங்க. உறவுகள் இருக்கு. அவங்க தோள் மேல சாஞ்சி அழலாம். கஷ்டத்தை பகிர்ந்துக்கலாம். மறுபடியும் குழந்தையா மாறலாம். அப்படிங்கறது இருக்குல்ல.

vijaysethupathi

அதைப் பார்க்குறது வாழ்க்கையின் அர்த்தத்தை ரொம்ப அழகா புரிய வெச்சிடும். நான் சூட்டிங் முடிஞ்சி வீட்டுக்கு வந்து பசங்களைக் கொஞ்சறது, மனைவியைப் பார்க்குறது, வீட்டுக்கு வந்துட்டோம் அப்படிங்கற திருப்தி இருக்குல. அது அற்புதமான விஷயம் என்கிறார் விஜய்சேதுபதி.

அதே போல நடிகர் சமுத்திரக்கனியும் ஒரு அற்புதமான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். விஜய்சேதுபதி விஷயத்தில் தைரியமாக ஒத்துக் கொண்டவர்கள் இவரது கருத்தை ஏற்பதற்கு சற்றே தயங்குவார்கள். ஏன்னா அது அவ்வளவு வலிமையான உண்மை. அப்படி என்றால் கடைபிடிப்பது கொஞ்சம் கஷ்டமுங்க.

ஏன்னா அது ரியல் லைஃப்ல செட்டாகாதுன்னு பலரும் சொல்வாங்க. ஆனா இதைக் கடைபிடித்தால் அதுதான் உங்கள் வாழ்க்கையை உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும். மாத்திரை கசப்பாகத்தான் இருக்கும். அதை சாப்பிட்டால் தானே குணமாகும். அது போலத்தான் இவரது கருத்தும். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

இந்த பிரபஞ்சத்துக்கு உண்மையா இருக்குற வரைக்கும் நாம இயங்கிட்டு இருக்க முடியும். நீங்க நினைக்கலாம். அவன் எவ்ளோ தப்பு பண்றான். ஆனாலும் நல்லா இருக்கானு. இதைச் சொல்லி நம்மளையும் தப்பு பண்ணத் தூண்டுவாங்க. ஆனா அதெல்லாம் நிலைக்காது. கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்.

மத்தவங்களுக்கு துரோகம், கெடுதல் செஞ்சிட்டு இந்த உலகத்துல இருந்து தப்பிச்சி போயிட முடியாது. எல்லாரும் பதில் சொல்லிட்டுத் தான் இந்த உலகத்தை விட்டுப் போகணும். அத நான் ரொம்ப நம்புறவன் என்கிறார் சமுத்திரக்கனி.

Next Story