Categories: Cinema News Gossips

விக்ரம் தாறுமாறு ஹிட்.! ஆண்டவருக்கு தூது விடும் டான் தயாரிப்பாளர்.! அடுத்த பிரமாண்ட அப்டேட்..,

உலகநாயன் கமலஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி பேய் ஹிட் அடித்து வருகிறது. 150 கோடி வசூலை அசால்டாக கடந்து இன்னும் பல ஊர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படம் இன்னும் வரும் வாரங்களில் வசூலை வாரிக்குவிக்கும் என கூறிவருகின்றனர் சினிமா வாசிகள்.  இது இந்தனை நாள் சினிமாவை கொஞ்சம் ஒதுக்கி வைத்திருந்த கமலை யோசிக்க வைத்துள்ளது.

அடுத்து இதே போல பிரமாண்ட வெற்றியை பெற வேண்டும். விக்ரம் படத்தை விட அதிக பட்ஜெட் படத்தை இயக்க வேண்டும் என யோசித்து வருகிறார். இதனை எப்படியோ அறிந்த லைகா நிறுவனம் இந்தியன் 2 வை மீண்டும் படமாக்க காய் நகர்த்துகிறதாம்.

இதையும் படியுங்களேன் – நெல்சனை நம்பாத ரஜினி.! மீண்டும் இணையும் பழைய கூட்டணி.! அவரை இப்படி அசிங்கப்படுத்திடீங்களே.!?

லைகா தயாரிப்பில் அண்மையில் டான் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. அதே போல கமல் படமான விக்ரமும் மிக பெரிய வெற்றியை பெற்று வருகிறது. ஆதலால் இருவரும் சேர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் உருவாக்க  முயற்சித்து வருகின்றனராம்.

விரைவில் இந்தியன் 2 மீண்டும் உயிர் பெற்று விட்டது என்கிற நல்ல செய்தி ரசிகர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan