பேத்தியுடன் ஜாலியாக ஒரு வாக்கிங்! பாசக்கார தாத்தாவாக மாறிய சீயான் விக்ரம்
தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். தனக்கென தனி அடையாளத்தை கொண்டவராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தன் நடிப்பில் பலவிதமான தோற்றத்தை வெளிப்படுத்தி மக்களிடையே அதிக கவனம் ஈர்த்தவர் விக்ரம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான வீர தீர சூரன் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அதற்கு முன் வெளியான தங்கலான் திரைப்படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றிருந்தது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விக்ரமுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. தங்கலான் திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோடம்பாக்கத்திலேயே தங்கலான் திரைப்படத்தை கொண்டாடவில்லை.
இருந்தாலும் அந்தப் படத்தில் விக்ரம் எடுத்த முயற்சி, உழைப்பு பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. 50வயதை கடந்தாலும் இன்னும் அவருக்குண்டான ஸ்டைல், கிரேஸ் அவரிடமிருந்து குறையவில்லை. குறிப்பாக பெண்களை வசீகரிக்கும் தோற்றம் விக்ரமிடம் நிறையவே இருக்கிறது. பட புரோமோஷனுக்கு அவர் வரும் போதெல்லாம் ‘என்ன ஸ்டைலா இருக்காருய்யா’என்றுதான் பார்க்க தோன்றும்.
இந்த நிலையில் விக்ரமின் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. விக்ரமுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். மகளுக்கு திருமணமாகிவிட்டது. தன் மகளின் குழந்தையுடன் இருக்கும் வீடியோதான் வைரலாகி வருகின்றது. அதாவது தனது பேத்தியுடன் விக்ரம் தெருவில் ஜாலியாக வாக்கிங் செய்து கொண்டிருக்கிறார்.

கூடவே துருவ் விக்ரமும் தெருவில் தனது நண்பருடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். பேத்தியின் கையைப் பிடித்து விக்ரம் செல்லும் அந்த காட்சி இணையவாசிகளை மிகவும் கவர்ந்துவிட்டது. ஒரு நடிப்பு அரக்கனாகவே பார்த்த விக்ரமை இப்போது தாத்தா ஸ்தானத்தில் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அவருடைய மகன் துருவ் விக்ரம் நடிப்பில் சமீபத்தில்தான் பைசன் திரைப்பட் வெளியானது. அப்பாவை போலவே துருவ் விக்ரமும் நடிப்பில் புலியாகத்தான் அந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
