வாய் இருக்குனு பேசி செருப்படி வாங்கிய நடிகர்! காலில் விழ வைத்த விக்ரமன்
தமிழ் சினிமாவில் 90கள் காலத்தில் ஒரு புகழ்மிக்க இயக்குனராக இருந்தவர் இயக்குனர் விக்ரமன். விக்ரமன் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பூவே உனக்காக திரைப்படம் தான். விஜயை தமிழ் மக்களிடம் ஒரு நடிகராக காட்டிய பெருமை இந்த திரைப்படத்திற்கு சேரும் .
குடும்ப பாங்கான படங்களை எடுப்பதில் மிகவும் திறமைசாலியானவர் இயக்குனர் விக்ரமன் .அவர் எடுத்த பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக அமைந்திருக்கின்றன. உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற அவருடைய படங்களின் லிஸ்ட்டை சொல்லிக்கொண்டே போகலாம்.
பார்க்க மிகவும் அமைதியானவர். அனைவரிடமும் மிகவும் பண்பாக பேசக்கூடியவர். ஒட்டுமொத்தத்தில் தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் விக்ரமன். இப்போது அவருடைய மகன் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அவர் மகன் ஹீரோவாக நடித்த முதல் படத்தை லான்ச் செய்தது நடிகர் விஜய் தான்.
அது சம்பந்தமான பல புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அவருடைய பழைய வீடியோ ஒன்று இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. விக்ரமன் திரைப்படம் என்றாலே அழ வைக்கும் திரைப்படங்களாக தான் இருக்கும் என்ற வகையில் ஆர் ஜே பாலாஜி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது பேசி இருந்தார்.
அதே மேடையில் விக்ரமனும் இருக்க உடனே விக்ரமன் வந்து பேசும் போது என்னுடைய படங்கள் எப்போதும் அழ வைக்கும் மாதிரியாகத்தான் இருக்கும் என சொன்னீர்கள். நானும் காமெடி படங்களை எடுத்து இருக்கிறேன். என்னுடைய படங்களிலும் காமெடி நிறைய இருந்திருக்கின்றன.
நானும் கல்லூரியில் காமெடி பண்ணினவன் தான். கிண்டலடித்தவன் தான். அதே மாதிரி இப்போ நான் கிண்டல் அடிக்க ஆரம்பிச்சிட்டா நீங்க எல்லாம் தாங்க மாட்டீங்க என சொன்னதுமே ஆர் ஜே பாலாஜி உடனே விக்ரமனின் காலில் விழுந்து விட்டார்.
வெளியில நான் ஜென்டில்மேன்னா காட்டிக்கிறேன். ஆனால் நான் ரியல் ஜென்டில்மேன் கிடையாது என ஆர் ஜே பாலாஜியை சாதுரியமாக தன்னுடைய பாணியில் சொல்லிவிட்டு சென்றார் இயக்குனர் விக்ரமன். இந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.