மீண்டும் விஷால் சுந்தர் சி கூட்டணி!.. இத்தனை கோடி பட்ஜெட்டா?.. வெளியான மாஸ் தகவல்..!

Actor Vishal: தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஷால். ஆரம்ப காலகட்டத்தில் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த விஷால் ஒரு கட்டத்தில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுக்க ஆரம்பித்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மட்டுமே நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பிறகு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.
மதகஜராஜா வெற்றி: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் வெளியானது. விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சொல்லப்போனால் இந்த வருடத்தின் பொங்கல் பண்டிகையின் வின்னர் மதகஜராஜா திரைப்படம் தான்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால்: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் ஏற்கனவே ஆம்பள, ஆக்சன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. ஆம்பள திரைப்படத்திற்கு முன்னதாகவே சுந்தர் சி, விஷால் கூட்டணியில் உருவான திரைப்படம் மதகஜராஜா.
ஆனால் அந்த சமயத்தில் ஏற்பட்ட நீதி பிரச்சனை காரணமாக இப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்த திரைப்படம் தற்போது பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை பார்த்த ரசிகர்கள் பலரும் மீண்டும் சுந்தர் சி கூட்டணியில் விஷால் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி வந்தார்கள்.
மீண்டும் சுந்தர் சி விஷால்: மதகஜராஜா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மீண்டும் சுந்தர்சியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். இத்தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மீண்டும் இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் தொடர்பான தகவல் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் இந்த திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், இதில் நடிகர் விஷாலுக்கு மட்டும் 30 கோடி சம்பளம் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவர் மறுத்தால் வடிவேலு இப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகின்றது. மேலும் அவ்னி சினிமேக்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறி வருகிறார்கள். விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.