விஷாலுக்கு இருந்தது வைரஸ் காய்ச்சல் அல்ல... அதையும் தாண்டி... இதுக்கு காரணம் யாரு தெரியுமா?
மதகஜராஜா படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்ல விஷாலுக்கு கை நடுக்கம் இருந்தது. இது வைரல் காய்ச்சலோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
விஷாலுக்கு இருந்தது வைரஸ் காய்ச்சல் அல்ல. அது நல்லாவே தெரியுது. ஏன்னா அப்படி இருந்தா இன்னொருத்தரை தொடவே மாட்டாங்க. அவரு குஷ்பூவைக் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுத்தாரு. அவருக்கு இருக்குற பிரச்சனையே வேற. அது என்னன்னு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொல்கிறார். என்னன்னு பார்ப்போமா...
அவருக்கு வந்தது வேற பிரச்சனை என்பது 'டக்'னு பார்க்கும்போதே தெரிகிறது. மதகஜராஜா படத்தின் ஈவென்ட்ல விஷால் பேசியது மறுநாளே செய்தியாக வந்ததும் வேற வழியில்ல. அவங்க பூசி மெழுக வேண்டிய சூழ்நிலையில இருக்காங்க. வைரல் ஃபீவர்னு சொல்றாங்க.
அப்படின்னா அவங்க யாரையும் தொடவே மாட்டாங்க. மாஸ்க் இல்லாம தான் வந்தாரு. குஷ்பூவைக் கட்டிப்பிடிச்சி முத்தம்லாம் கொடுத்ததைப் பார்த்தோம். அவருக்கு இருந்தது அந்த வைரல் ஃபீவர் இல்ல. அதை திரையுலகில் கடந்த பல வருடங்களாக விஷாலை நாம பார்த்து வர்றோம்.
அவர் எவ்வளவு பெரிய சிக்கல்களுக்கு ஆளாகி இருக்காரு. இன்னும் எவ்வளவு பெரிய குழப்பங்களுக்கு ஆளாகி இருக்காருன்னு தெரியும். இன்னும் தேவையில்லாத டென்ஷன்ல நிச்சயமா உடம்புல பெரிய பாதிப்பு வரும். அதுதான் விஷாலுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கும்.
இன்னொன்னு பாலாவின் அவன் இவன் படம் வந்து பல வருஷங்களாக விஷாலுக்கு மிகப்பெரிய துன்பத்தைக் கொடுத்துக்கிட்டே இருக்கு. சமீபத்தில் வெளிநாட்டுக்குப் போயி அதுக்காக சிகிச்சை எடுத்துட்டு கூட வந்தார். ஓயாத ஒற்றைத்தலைவலி. அவரால அதை மாற்றவே முடியல. என்னென்னவோ ட்ரீட்மெண்ட்லாம் எடுத்தாரு.
அப்புறம் ஆபரேஷன்னும் சொன்னாங்க. எல்லாம் எடுத்தும் அது குறையல. இப்போ கை நடுக்கத்துக்கே ட்ரீட்மெண்ட்னு சொல்றாங்க. அவர் வராமலே இருந்துருக்கலாம். இல்லன்னா கையைக் காட்டாம இருந்துருக்கலாம்.
5 ஸ்டார் கதிரேசன், சத்யஜோதி பிலிம்ஸ்னு இருவருக்கும் படங்கள் பண்ண வேண்டி இருக்கு. ஆனால் அவர் போகவே இல்லை. இரும்புத்திரை 2 தான் பண்ற மாதிரி மூடுல இருக்காரு. அவர் இப்போது நடிக்கக்கூடிய சூழ்நிலையில் இல்லை.
இந்த வைரல் ஃபீவர்லாம் இந்தப் பிரச்சனையை ஆஃப் பண்றதுக்காக சொல்றதுதான். இந்தப் படத்தை (மதகஜராஜா) ஓட வைக்க அவர் இப்படி ஒரு நடிப்பை நடிக்க வேண்டிய அவசியமே இல்லை.
விஷால், சந்தானம் நடித்துள்ள மதகஜராஜாவை சுந்தர்.சி. நிச்சயம் கலகலப்பாகக் கொண்டு செல்வார். அதே நேரம் படத்தில் சந்தானம் காமெடியும் பட்டையைக் கிளப்பம் என்பதால் படம் நல்லா வரும் என்றே நினைக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.