மன உளைச்சல்!.. உடல் நலப்பிரச்சனை!.. விஷாலுக்கு துணை அவசியம்!.. பிரபலம் பேட்டி...

by ROHINI |   ( Updated:2025-05-20 06:40:30  )
sai
X

sai

முரட்டு சிங்கிள்: நடிகர் விஷால் நடிகை தன்சிகாவை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து இருப்பது குறித்து திரைப்படத் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்போது 47 வயதாகிறது. இவரது பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. சினிமா உலகில் நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக உலா வந்த இவருக்கு, நண்பர்கள் பட்டாளம் அதிகம். நடிகர் சிம்பு மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் இந்த லிஸ்ட்டில் குறிப்பிடத்தக்கவர்கள். இதன் காரணமாகவே பல ஹீரோயின்களுடன் கிசு கிசுக்களில் இவர் பெயர் அடிபடுவது வழக்கம்.

பிரபல நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமியுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று சொல்லி வந்த நிலையில் திடீரென அவர்கள் காதல் முறிந்து போனது. அதற்கு பிறகு ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று அதன் பின்னர் திருமணம் நின்று போனது. அதற்கான காரனத்தை இரு தரப்பினரும் இதுவரை தெரிவிக்கவில்லை.நடிகர் விஷால் சினிமா மட்டுமின்றி சமூக சேவைகள் மற்றும் அரசியலிலும் ஆர்வம் கொண்டவர். அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

முடங்கிக் கிடக்க வேண்டிய கட்டாயம்: கட்டிட திறப்பு விழா நடக்கும் போதுதான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கட்டுமான பணிகள் முடிந்து வரும் ஆகஸ்டு மாதம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நடிகர் விஷாலின் சமீபத்திய படங்கள் வெற்றி அடையவில்லை. நண்பர்களுக்கு உதவுவதற்காக அவர் நடித்த படமும் வெற்றி அடையாததால் அந்த கடனும் இவர் தலையில் விழுந்ததாக சொல்லப்பட்டது. இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, நடிகர் சங்க கட்டிட பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்த அவர் கடந்த சில காலமாக வெளியில் தலை காட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். இந்த நிலையில் அவர் நடித்து 13 ஆண்டுகள் கழித்து வெளியான மதகஜராஜா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது அவருக்கு கை நடுக்கம் காணப்பட்டது.

அவர் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகள் முளைத்த நிலையில் கூவாகம் திருவிழா மேடையில் அவர் மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பெண் எல்லாம் பார்த்து முடித்து விட்டதாகவும், விரைவில் திருமண தேதியை அறிவிக்க போவதாகவும் கூறினார். ஆனால் அந்த பெண் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நடிகை தன்ஷிகா நடிப்பில் வெளியாக உள்ள யோகிடா திரைப்பட பாடல் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால், தான் நடிகை தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வரும் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி தனது பிறந்த நாள் அன்று திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

திருமணத்தை உறுதி செய்த விஷால்: இதை நடிகை தன்ஷிகாவும் உறுதி செய்ததுடன் இருவரும் மேடையிலேயே முத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து திரைப்படத் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்த திருமணம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். பல்வேறு மன உளைச்சல் மற்றும் உடல் நல பிரச்சினை, நிதி நெருக்கடிகளில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கும் நடிகர் விஷாலுக்கு இந்த திருமணம் நிச்சயம் அவர் வாழ்வில் சந்தோஷத்தை கொடுக்கும். அவருக்கு நரம்பு மண்டல சம்பந்தமான பிரச்சினை இருக்கிறது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். அதற்கு கொடுக்கும் மாத்திரைகளின் வீரியம் அவருக்கு சோர்வை கொடுக்கிறது.

sai

இதனால் எப்போதும் படுக்கையில் இருக்க வேண்டிய நிலையில் அவருக்கு யாரும் துணை இல்லை, வீட்டில் இருப்பவர்கள் சாப்பாடு கொடுத்தால் அதை சாப்பிட்டு விட்டு அப்படியே படுத்து விடுவாராம். நட்பு வட்டாரமும் குறைந்து போனதால் அவர் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டார். இந்த உடல் நல பிரச்சினை விரைவில் சரியாக கூடியது தான். அவரும் இதில் இருந்து பெருமளவில் வெளியே வந்து விட்டார். இந்த நிலையில் அவருக்கு ஒரு துணை அவசியம். இளமை காலம் போல் அவரால் இனி இருக்க முடியாது. எனவே அவரின் இந்த திருமண முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஏன் இந்த திருமணம்: ஆண்கள் பலவீனமாவர்கள். அவர்களால் பெண்களின் துணை இன்றி இருக்க முடியாது. இயற்கையின் படைப்பு அப்படித்தான் இருக்கிறது. இருவருக்கும் 13 ஆண்டுகள் வயது வித்தியாசம் என்கிறார்கள். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அந்த காலம் முதல் தற்போது வரை இதற்கு பல முன் உதாரணங்கள் இருக்கின்றன. எனவே இந்த திருமணத்தை எல்லோரும் வாழ்த்துவோம்.திரை உலகில் முரட்டு சிங்கிளாக வலம் வந்தவர்களில் நடிகர் ஆர்யா, பிரேம்ஜி ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்து விட்டனர். தற்போது நடிகர் விஷாலும் இணைய போகிறார். இதில் சிம்பு மட்டுமே இன்னும் முரட்டு சிங்கிளாக உலா வருகிறார். அவரும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் அந்த பேட்டியில் பாலாஜி பிரபு தெரிவித்து உள்ளார்.

Next Story