Vishal Marriage: இன்னிக்கு நடக்க இருந்த திருமணம்.. அடுத்த திருமண தேதியை அறிவித்த விஷால்
Vishal Marriage: விஷால் இன்று அவருடைய 48வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதே நாளில் அவருக்கு நடிகை சாய் தன்சிகாவுடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருக்கிறது. மிக எளிமையாக விஷால் சாய் தன்சிகாவின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. சாய் தன்சிகாவின் பெற்றோர் விஷாலின் குடும்பத்தார் இவர்கள் முன்னிலையில் அவர்களுடைய நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்திருக்கிறது.
இதற்கு முன் ஒரு விழா மேடையில் இவர்தான் என்னுடைய வருங்கால மனைவி என தன்சிகாவை காட்டி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் விஷால். அந்த மேடையிலேயே ஆகஸ்ட் 29ஆம் தேதி அதாவது இன்று தன்னுடைய திருமண நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் இன்றைக்கு தான் அவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.
அடுத்து உங்களுடைய திருமணம் எப்போது என கேட்டதற்கு இன்னும் இரண்டு மாதங்களில் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விடும். அதிலிருந்து வருகிற முதல் முகூர்த்தத்திலேயே எங்களுடைய திருமணம் கண்டிப்பாக நடக்கும். இதே கட்டிடத்தில் தான் நடக்கும் என விஷால் உறுதிப்பட கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட 9 வருடங்கள் காத்திருந்து விட்டார்.
அவருக்கு நான் ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தேன். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு இன்று உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்பதால் அந்த இரண்டு மாதங்களும் அவர் காத்திருப்பதாகவே சொல்லி இருக்கிறார். கண்டிப்பாக சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு அதன் திறப்பு விழாவிற்கு அடுத்து வரும் முதல் முகூர்த்த நாளிலேயே எங்களுடைய திருமணம் நடைபெறும் என விஷால் கூறியிருக்கிறார்.
அதோடு நிச்சயதார்த்தமான இன்று விஷாலும் சாய் தன்சிகாவும் மோதிரம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதில் விஷாலின் கையில் சாய் தன்ஷிகா பெயர் போடப்பட்ட மோதிரத்தை அணிந்திருக்கிறார். அதை பத்திரிகையாளர்களிடம் காட்டி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால். என்னுடைய வாழ்க்கை துணைவியை நான் தேர்ந்தெடுத்து விட்டேன். இதுதான் என்னுடைய கடைசி பேச்சுலர் பிறந்தநாள் என்றும் கூறியிருக்கிறார் விஷால்.
