Vishal: தேசிய விருது கொடுத்தாலும் குப்பையிலதான் போடுவேன்!.. விஷால் இப்படி பொங்கிட்டாரே!...

விஷாலின் அப்பா பெரிய தயாரிப்பாளராக இருந்ததால் சுலபமாக சினிமாவுக்கு வந்தவர் விஷால். துவக்கத்தில் இயக்குனராக ஆசைப்பட்டு நடிகர் அர்ஜுன் இயக்குனராக மாறி படங்களை இயக்கிய போது அந்த படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார் விஷால். அதன்பின் சினிமாவுக்கு நடிக்க வந்து விட்டார். இவர் நடிப்பில் வெளியான திமிரு, சண்டக்கோழி ஆக இரண்டு படங்களும் அதிரடி ஆக்சன் படங்களாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்ததால் இவரின் மார்க்கெட் வேற ரேன்ச்சுக்கு போனது.
விஷாலை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முன்வந்தார்கள். ஆனால் விஷாலால் தொடர் வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை. பல வருடங்கள் கழித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார் விஷால். அந்த படத்தின் வெற்றிக்கு எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய காரணம்.
தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் விஷால். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய விஷால் ‘எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. 8 கோடி மக்களுக்கு என்ன பிடிக்கும்?.. யார் சிறந்த நடிகர்? என்பதை 8 பேர் உட்கார்ந்து எப்படி கணிக்க முடியும்?.. மக்களிடம் போய் சர்வே எடுத்தால்தான் அது தெரியும்.
நான் தேசிய விருதையும் சேர்த்துதான் சொல்கிறேன். எனக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. எனக்கு விருது கொடுத்தா கண்டிப்பா அது குப்பையில்தான் தூக்கி வீசுவேன். அது தங்க விருதா இருந்தா அத அடமானம் வச்சு அந்த காசை வாங்கி சில பேருக்கு உதவி செஞ்சிருவேன்’ என பொங்கி இருக்கிறார் விஷால்.
விருதுகள் வாங்குவதை நடிகர்கள் பெருமையாகவும், கவுரமாகவும் கருதும் நிலையில் விஷாலின் பார்வை வேறு மாதிரி இருக்கிறது. உண்மையில் அவருக்கு விருதுகள் கொடுக்கப்படவில்லை என்கிற கோபத்தில்தான் இப்படி பேசுகிறார் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.