போவேன்.. ஆனா போமாட்டேன்.. மாற்றி மாற்றி கம்பி சுத்தும் விஷால்…

by Akhilan |
போவேன்.. ஆனா போமாட்டேன்.. மாற்றி மாற்றி கம்பி சுத்தும் விஷால்…
X

Vishal: நடிகர் விஷால் பொதுவெளியில் பேசும் போது மாற்றி மாற்றி பேசி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி அவரை ரசிகர்கள் கலாய்த்து வருவதும் வாடிக்கையாக மாறி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் தன்னை புரட்சி தளபதி என அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகர் விஷால். நடிப்பில் கவனம் செலுத்தி வந்தவர் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் திடீரென அவர் நடிகர் சங்க பிரச்சனைக்குள் தலையிட்டார்.

தேர்தலில் போட்டியிட்டு பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். இதை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியலிலும் தன்னுடைய கவனத்தை திருப்பினார். ஆர்கே நகரில் நாமினேஷன் செய்து அதில் தகுதி இழந்தார். சமீபத்திய தேர்தலில் நடிகர் விஜய் ஃபாலோ செய்து சைக்கிளில் வந்து ரசிகர்களிடம் விமர்சிக்கப்பட்டார்.

நடிகர் விஜயின் அரசியல் கட்சி அறிவிக்கப்பட்ட பின் முதல் அரசியல் மாநாட்டிற்கு அழைக்காவிடாலும் சென்று வருவேன் என செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து இருந்தார். ஆனால் தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டியில், விஜய் தன்னுடைய முதல் அடியை வைத்திருக்கிறார்.

விஜயகாந்த் அண்ணனுக்கு பிறகு அவரிடம் தான் தற்போது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆடம்பரமாக இந்த விஷயம் நடக்க இருக்கிறது. மக்களும் அவரிடம் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். கோடிக்கணக்கில் அவர் வாங்கும் சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது சாதாரண விஷயம் இல்லை.

இதை தொடர்ந்து நீங்கள் மாநாட்டிற்கு செல்லுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்ட போது இல்லை என விஷால் பேசியிருக்கிறார். இதனால் விஷால் தற்போது மாற்றி மாற்றி பேசி வருகிறார். நிதானத்தில் தான் இருக்கிறாரா எனவும் ரசிகர்கள் மாறி மாறி கமெண்ட் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.

Next Story