பொண்ணு பார்த்தாச்சு... தேதி குறிச்சாச்சு... சந்தோஷம் பொங்கச் சொல்லும் விஷால்!

திரைப்பிரபலங்கள் என்றாலே திருமண விஷயத்தைக் காலாகாலத்தில் நடத்தி முடிக்க மாட்டார்கள் போல. திரிஷா, தமன்னா, ஆண்ட்ரியா, நக்மா, அனுஷ்கா, கிரண் என நடிகைகள் பலர் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர். அதே போல நடிகர்களிலும் இருக்கிறார்கள். விஷாலுக்கு 47 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகலையேன்னு பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இப்போதுதான் விடை கிடைத்துள்ளது.
2004ல் செல்லமே என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் விஷால் அறிமுகம் ஆனார். தொடர்ந்து திரையுலகில் 21 வருடங்களாக உள்ளார். தற்போது நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கிறார். தலைவராக நாசர் உள்ளார்.
விஷாலைப் பொருத்தவரை எதையும் திட்டமிட்டு செய்து முடிக்கக்கூடியவர். முன்பு ஒரு சமயம் திருட்டு விசிடியை ஒழிக்க கடும்பாடு பட்டார். அதே போல நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டியே தீருவேன் என்பதில் உறுதியாக இருந்தார். அதன்பிறகு தான் திருமணம் என்றும் சொன்னார். அதே போல ஜெயித்துக் காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.
நடிகர் சங்க கட்டிடம் தான் தனது கனவு. அதனை கட்டி முடித்த பின்பே திருமணம் செய்வேன் என்று அறிவித்தேன். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுதான் செயல்பட்டேன். முதலில் வெறும் 3 ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டிடம் முடிந்து விடும் என நினைத்தேன். ஆனால் 9 ஆண்டுகளைக் கடந்து விட்டது.
வருகின்ற ஆகஸ்டு 15ம் தேதி நடிகர் சங்கம் கட்டிடத்தை திறக்க உள்ளோம். அநேகமாக அடுத்த 4 மாதங்களில் எனது திருமணம் நடப்பது உறுதி. எனது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 கூட எனது திருமணம் நடக்கலாம். பெண் பார்த்து பேசி விட்டோம். இது காதல் திருமணம் தான். ஒரு மாதமாக அந்தப் பெண்ணைக் காதலித்து வருகிறேன். அவர் யார் என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன் என்கிறார் நடிகர் விஷால்.